தம்பியை பழிவாங்க கிளம்பிய சார்மி

சார்மி நடித்து வெளியான மந்த்ரா படம் ஆந்திராவிலும், தமிழ் நாட்டிலும் அமோக வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து மந்த்ரா படத்தின் இரண்டாம் பாகமாக“ மந்த்ரா – 2 “ படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தயாராகிக் கொண்டிருக்கிறது.

இந்த படத்தை SSS பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக எஸ்.சுந்தரம் தயாரிக்கிறார்.

கதாநாயகனாக கருங்காலி படத்தில் நடித்த சீனிவாஸ் நடிக்கிறார். நாயகியாக சார்மி நடிக்கிறார். முக்கிய வேடத்தில் தணிகலபரணி நடிக்கிறார்.

அமுல் வசனத்தை எழுதுகிறார்.

இசை   –  சுனில் காஷ்யப்

ஒளிப்பதிவு    –  ராஜேந்திரா

ஸ்டன்ட்      –   ரன் ஜாஸ்வா

நடனம்        –   பிரேம்ரஜித்

திரைக்கதை அமைத்து இயக்குகிறார் S.V.சதீஷ்

தயாரிப்பு   – எஸ்.சுந்தரம்

சொத்துக்காக ஆசைப்பட்டு அண்ணன் குடும்பத்தையே கொலை செய்கிறான் தம்பி. அதிலிருந்து தப்பித்து விடுகிற சார்மியின் உடம்பில் அவளது அப்பாவின் ஆவி புகுந்து கொண்டு அவளை காப்பாற்றுவதுடன் அந்த அக்கிரமங்களுக்குக் காரணமான தம்பியை எப்படி பழி வாங்குகிறது என்பதே மந்த்ரா – 2 படத்தின் கதை!

மந்த்ரா – 1 திரில்லராகவும், மந்த்ரா – 2 திகில் கலந்த பேய்க்கதையாகவும் உருவாகியுள்ளது.

விரைவில் இப்படம் திரைக்கு வர உள்ளது.

Read previous post:
ரஜினிக்கு வில்லனா நடிக்கிறேன்! ஆனால் ஒரு கண்டிஷன்! விக்ரம் போட்ட கிடுக்கிப்பிடி, ஷங்கர் திணறல்?

எல்லாருக்கும் வருகிற ஆசைதான். விக்ரமுக்கும் வந்திருக்கிறது. அது என்ன? தன் மகனை ஹீரோவாக்க வேண்டும் என்பது! விக்ரமுக்கு இருக்கிற தொடர்புக்கும் செல்வாக்குக்கும் அது ஒன்றும் பெரிய விஷயமேயில்லை....

Close