தலைவா : நகைச்சுவை நடிகனுக்கு இருக்கும் சுயமரியாதை கூட ஹீரோவிற்கு இல்லையே!
ஒரு சினிமாவை வெளியிடுவதற்கு இவ்வளவு தடைககள் ஏற்படுகிறது என்றால் அதைத் தட்டிக் கேட்பதற்கு கூட இங்கே எந்த சினிமாக்காரனுக்கும் தைரியம் இல்லை என்பதே உண்மை. படங்களில் கையை, காலை ஆட்டி வில்லன்களை பந்தாடும் இந்த நாயகர்கள் நிஜவாழ்வில் தொடை நடுங்கி கோழைகளாக இருக்கிறார்கள் என்பதே யதார்த்தம். ஆனாலும் இந்த இலட்சணத்தில் இவர்களுக்கு அடுத்த முதல்வர் ஆசை வராமல் இல்லை. தனது ரசிகர் பட்டாளத்தை வைத்து இந்த ஆசைகளை அவர்களே காசு கொடுத்து முழங்கச் சொல்லி கேட்டு ரசிக்கிறார்கள்.
தலைவா படத்திற்கு பிரச்சினைகள் வந்த பிறகு இத்தகைய முழக்கங்கள் எதுவும் போடக்கூடாது என்று விஜய் தரப்பு தனது பட்டாளத்திற்கு சுற்றறிக்கை அனுப்பி, அப்படி எழுதப்பட்ட பேனர்களை அகற்றியதாம். அடுத்து இன்று விஜய் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் ஜெயலலிதாவின் சாதனைகளை பட்டியிலிட்டு, அப்பேற்பட்ட அம்மா தலைவா படப்பிரச்சினைகளை தீர்ப்பார் என்று கூறப்பட்டிருக்கிறது. இனி அடுத்தகட்டமாக என்ன செய்வார்கள்?
திமுகவிற்கு பிரச்சாரம் செய்த காரணத்தால் தனது படவாய்ப்புகளை இழந்த கூட ஒரு பிரஸ்மீட் வைத்து அம்மா காலில் விழுகிறேன், என்னை வாழவையுங்கள் என்று அழுது அரற்ற வில்லை. அப்படியே அவர் அழுதாலும் அதை ஒரு சறுக்கலாக யாரும் நினைக்கப் போவதில்லை. மக்களை சிரிக்க வைப்பதற்காக தன்னை இழிவுபடுத்திக் கொள்ளும் நகைச்சுவை நடிகனுக்கு இருக்கும் சுயமரியாதை கூட ஹீரோவிற்கு இல்லையே!
நான் அடிச்சா தாங்கமாட்ட,
நாலு மாசம் தூங்கமாட்ட ..
நன்றி :வினவு