தலை கிறுகிறுக்க வைக்கும் தலைமுடி பிரச்சனை அலர்ஜியால் தவிக்கும் அஜீத்?

கடந்த பல படங்களாகவே அஜீத் வெள்ளை கருப்பு முடியுடன்தான் தோன்றி வருகிறார். ‘பார்றா அவரது எளிமையை? படத்துக்காக கூட டை அடிக்க மாட்டேங்கிறாரே?’ என்று அவரது ரசிகர்கள் பனிக்குடமாக உருகிக் கொண்டிருக்கிறார்கள். இதை ‘சால்ட் அண்ட் பெப்பர் ’ என்று செல்லப் பெயரிட்டு அழைத்து ஆனந்தம் அடைகிறார்கள். பிடிச்சவங்க இருமுனா கூட சங்கீதம்னு சொல்ற ஊராச்சே? போகட்டும்… ஆனால் நிஜம் வேறு என்கிறது சினிமாவுலக அதிர்ச்சி தகவல்கள்.

அவரது முடியில் எந்த ‘டை’ அப்ளை செய்தாலும் அது அவருக்கு சரும அலர்ஜியை ஏற்படுத்திவிடுகிறதாம். இதனால்தான் பல படங்களாக அவர் தனது சால்ட் பெப்பர் தோற்றத்திலேயே நடித்து வந்தாராம். இப்போது அந்த வெள்ளை இன்னும் அதிகமாகி வருவதாலும், கவுதம்மேனன் யூத் படங்களாக எடுப்பவர் என்பதாலும் இந்த வெள்ளையை கருப்பாக்கியே தீர வேண்டிய கட்டாயத்திலிருக்கிறார் அஜீத். இந்த சவாலான தருணத்தை எதிர்கொள்ள வேண்டிய கவுதம் ‘எப்படியாவது கருப்பு ஹேரோட வந்துருங்க’ என்கிறாராம் அஜீத்திடம்.

உலகத்தின் அத்தனை மூலைகளில் இருந்தும் மிக மிக காஸ்ட்லியான ஹேர் டைகள் வரவழைக்கப்பட்டு நாள் தோறும் பரிசீலிக்கப்பட்டு வருகிறதாம். சரும நோய் நிபுணர்கள் அடங்கிய குழுவே அஜீத்தின் தலைமுடியை கருப்பாக்கிவிட போராடிக் கொண்டிருக்கிறார்களாம்.

ஒவ்வொருத்தரையும் கைதட்ட வைக்க எவ்வளவு போராட வேண்டியிருக்கு?

Ajith consulting dermatologists to avoid skin allergy!

Ajith recently has been appearing in ‘salt and pepper’ look in the last 3 films. While it is appreciated by audience and the public alike, it is heard that he could not apply ‘dye’ to his hair because the dye creates skin allergy to Ajith. So he avoided using any dye to look younger.

However, Gautham Menon wanted to make appear in a new hair style with black and hence requested Ajith to make sure he comes up with black hair. Ajith in order to oblige his director, is said to be trying imported ‘dyes’ in consultation with dermatologists to avoid any skin problems. Various permutations and combination of ‘dye’ products are being tested for Ajith, now.

To get appreciation from audience one need to have stylish look first, before capturing their attention with acting skills!

1 Comment
  1. Rahul says

    Billa2 la dye adicharu da lusu payalungala appo allergy pathi kavala padalaya illa ne yengayachu himalaya la dye vangi koduthiya … reel andhu pochu poi velaya parunga da…

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
லவ்வர் டேவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மனநிலை சரியில்லாதவர்கள் குஷ்பு குமுறல்

காதலர் தினத்தை கண்டு பிடித்தவன் கையில் கிடைத்தால் அவனை பொடிமாஸ் ஆக்கிவிடவும் தயங்காத கட்சிகள் வடக்கில் உண்டு. முக்கியமாக சிவசேனா. அந்த நாளில் கையில் கட்டையோடு திரியும்...

Close