‘தல’ படம் தீபாவளி கழிச்சு வந்தா நல்லாயிருக்கும்…’ -அஜீத்துக்கு நெருங்கும் ஆபத்து?

இந்த தீபாவளிக்கு நான்கு படங்கள் வருவதாக திட்டம். ஆனால் விதி என்னவோ? அதன் வகுத்தல் பெருக்கல்கள் என்னவோ? அதையெல்லாம் அறிந்து கொள்ள தீபாவளிக்கு முதல் நாள் வரைக்கும் நகத்தை கடித்துக் கொண்டு காத்திருக்க வேண்டியதுதான்.

அஜீத்தின் ஆரம்பம், கார்த்தியின் ஆல் இன் ஆல் அழகுராஜா, விஷாலின் பாண்டியநாடு செல்வராகவனின் இரண்டாம் உலகம்தான் அந்த நான்கு படங்களும். இதில் ஆல் இன் ஆல் அழகுராஜாவுக்கும், பாண்டியநாடு படத்திற்கும் தியேட்டர் புக் பண்ணுகிற வேலைகள் அநேமாக முடிந்தேவிட்டன. அதுமட்டுமல்ல, இப்படங்களை வெளியிடும் ஞானவேல் ராஜாவும் சரி, மதுரை பைனான்சியர் அன்புச்செழியனும் சரி. தியேட்டர் சைடில் செல்வாக்கானவர்கள். இரண்டாம் உலகம் தீபாவளிக்கு ரிலீஸ் என்று சொல்கிறார்களே தவிர, அதற்குண்டான வேலைகள் மந்தகதியாக நடப்பதாகவே தெரிகிறது. பிறகுதான் அஜீத்தின் ஆரம்பம்?

ஏகப்பட்ட சிக்கலே இங்குதான். ‘பாண்டியநாடு’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் ‘ஆரம்பம்’ படத்தை தள்ளிப் போடும் காட்சிகள் அரங்கேறியது. விழாவில் பேசிய தயாரிப்பாளர் சங்க தலைவர் கேயார், ‘தீபாவளிக்கு வருகிற எல்லா படங்களும் நல்லா ஓடணும் என்பதுதான் என் ஆசை. முன்பு 2800க்கும் மேற்பட்ட தியேட்டர்கள் இருந்தன. இப்போது அது ஆயிரத்து சொச்சமாக குறைந்துவிட்டது. அதிலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் என்று எடுத்துக் கொண்டால் முன்னுத்தி சொச்சம்தான். இது தல படமும் வரப்போவுது. அவர் படம் வந்தா அது தல தீபாவளிதான். அதுல சந்தேகம் இல்ல. ஆனால் மற்ற படங்களும் வர்ற காரணத்தால் தல தன் படத்தை ஒரு வாரம் கழிச்சு கொண்டு வந்தார்னா நல்லாயிருக்கும்’ என்றார்.

விஷாலும் கிட்டதட்ட அதையே மையப்படுத்தி பேசினார். மதகஜராஜா படத்தை ரிலீஸ் பண்றதுக்காக நான் அவ்வளவு கஷ்டப்பட்டேன். இங்க ஓடுன்னு சொல்வாங்க. இங்க ஓடுவேன். அங்க ஓடுன்னு சொல்வாங்க. அங்க ஓடுவேன். அவ்வளவு ஏன், சென்சார் சர்டிபிகேட் ஜெராக்ஸ் காப்பியை கூட நான்தான் ஓடி ஓடி எடுத்தேன். நீங்க ஹீரோ. இந்த வேலையையெல்லாம் செய்யக் கூடாதுன்னு சொன்னாங்க. இருந்தாலும் ஆர்வத்தோடவும் வெறியோடவும் ஓடுனேன். பட்… கடைசியில என்னாச்சுன்னு உங்க எல்லாருக்கும் தெரியும்.

இப்பவும் நானே சொந்தமா தயாரிக்கிற இந்த பாண்டியநாடு படத்தின் ரிலீசுக்காக ஓடிகிட்டு இருக்கேன். இந்த முறை எனக்கு பழைய அனுபவம் கிடைச்சுட கூடாதுன்னு கேயார் சார்கிட்ட கேட்டுக்கிறேன் என்றார்.

எனக்கு தர வேண்டிய பணத்தை செட்டில் செய்யாமல் ஆரம்பம் படத்தை வெளியிடக் கூடாது என்று இன்று ஒரு வழக்கு போடப்பட்டிருக்கிறது. போகிற போக்கை பார்த்தால்…. அஜீத் என்கிற பட்டாசுக்கு ஆபத்து நெருங்கிக் கொண்டிருப்பதாகவே படுகிறது.

Ajith’s Arrambam facing hurdles

It has become a routine in Kollywood whenever a big hero’s film to hit the theatres, there will be people working directly or indirectly to halt the release of the film at least temporarily. It has become a profession in Kollywood now, and people are engaged to this job against decent payment, perhaps, one can visualise. Ajith’s film is facing similar hurdles one after another, in some way or the other so that the film gets delayed release. It is pertinent to point out that producers despite having a council amongst them are not able to mitigate the problem. Producers’ Council President Kayaar during the launching of Vishal’s Pandia Naadu has made a request that Thala Ajith’s film be postponed by a week or so, so that other films can do some business. Vishal too while speaking in the event, narrated his difficulties faced during the last minute halt of his film Madha Gaja Raja. He too conveyed same sentiments but he put the request to Kayaar. On the one side getting adequate theatres for the film release, and on the other side request after request to hold the film’s release, is what Thala’s Arrambam is facing now. One has to wait and see if it will be a Thala Diwali for the fans or just Thala Ajith, after Diwali?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
‘நான் ஹாஸ்டல்ல தங்கல…’ – நமது செய்திக்கு தன்ஷிகா மறுப்பு

இன்று காலை நடிகை தன்ஷிகா வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாக நமது newtamilcinema.coim ல் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தோம். இதை படித்துவிட்டு நம்மை தொடர்பு கொண்டார் தன்ஷிகா. ‘நீங்க...

Close