தார் ஊசி போடுதேடா தமிழ்…? -அலுத்துக் கொள்ளும் ஹீரோக்கள்!

நான் தமிழன்டா என்று சினிமா திரையில் மார் தட்டும் நம்ம ஊர் சினிமா ஹீரோக்கள் சிலரிடம் ஒரு தமிழ் பேப்பரை கொடுத்தால் அலங்க மலங்க ஓடுவார்கள். ஏனென்றால் எழுத்துக் கூட்டி மட்டுமல்ல, எச்சில் கூட்டி கூட தமிழை படிக்க இயலாது அவர்களால். அப்படியென்றால் தன்னை பற்றி வருகிற செய்திகளை எப்படி தெரிந்து கொள்கிறார்களாம்? பக்கத்தில் இருப்பவர்களிடம் கொஞ்சம் படிங்கப்பா என்று சொல்லிதான்.

மேகசின் விஷயத்தில் இப்படி மேலோட்டமாக தப்பித்துக் கொண்டிருந்தாலும், சினிமாவில் டயலாக் பேசும்போது மட்டும் தலைசுற்றி போகிறது இவர்களுக்கு. உதவி இயக்குனர்களை படிக்க சொல்லிவிட்டு அப்படியே காதில் வாங்கி பேசுகிற கலையை வளர்த்துக் கொண்டவர்கள் இவர்கள். அப்படியிருந்தும் ஸ்கிரிப்டை கொஞ்சம் படிச்சு பாருங்க என்று கொடுத்துவிட்டு போகிறவர்களிடம், பதிலே சொல்ல முடியாமல் தடுமாறுகிறார்களாம். சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு தமிழ் படிக்கத் தெரியும். எழுத தெரியாது.

அஜீத், ஆர்யா, உள்ளிட்ட பல்வேறு ஹீரோக்களுக்கும் நிலைமை இதை விட மோசம். தமிழை பேச மட்டும்தான் தெரியுமாம். எழுதவோ, படிக்கவோ தெரியாது. இதை அப்படியே வளர விட்டால், அது தமிழன்னைக்கு செய்கிற துரோகம் என்று நினைத்தார்களோ, என்னவோ? சில நாட்களாக முன்னணி தமிழ் நாளிதழ்கள் சிலவற்றை பிரித்து வைத்துக் கொண்டு எழுத்துக் கூட்டி படிக்க பழகி வருகிறார்களாம்.

ஒரு நாளைக்கு நாலு முறை மகா கவி காளிதாஸ் படத்தை போட்டு பாருங்க. ஏதாவது மாற்றம் வருமா பார்க்கலாம்…

Read previous post:
Manadhil Mayam Seithai promo song

Close