திடீரென வருகிற போன் விஜய்யுடையதாக இருக்கலாம்… திகைக்கும் கோடம்பாக்கம்!

தாமரை இலை அழகு. தண்ணீரும் அழகு. ஆனால் அது இரண்டும் ஒட்டாமல் தனித்தனியாக தத்தளிக்கிறதே… அதுதான் சோகம்! கிட்டதட்ட விஜய்யும் அப்படிதான். உலகமே கூடி கும்மியடித்தாலும் அந்த இடத்தில் எதுவுமே நடக்காதது போல அமைதியாக இருப்பார். இவரிடம் கதை சொல்லப் போகிற இயக்குனர்களுக்கு நேரும் சங்கடம், உலகத்தில் யாருக்குமே நேர்ந்திருக்காது. ஏன்? வந்தவர் விழுந்து விழுந்து சிரிக்கும்படி கதை சொன்னாலும், இப்ப என்னமோ சொன்னீங்கல்ல? என்பது போலவே இருப்பார் விஜய். இதை ஒரு மேடையில் அவர் எதிரிலேயே சொல்லிவிட்டு போனார் ஒரு இயக்குனர். அந்தளவுக்கு தன்னை சுற்றி இறுக்கமான வலை பின்னி வைத்திருந்தவரிடம் அசுரத்தனமான மாற்றம் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

இப்போதெல்லாம் சில சினிமா வி.ஐ.பிகளுக்கு போன் வருகிறதாம். எடுத்தால்… எதிர்முனையில் விஜய். ‘எப்படியிருக்கீங்க? என்ன போயிட்டு இருக்கு? அடுத்த புராஜக்ட் என்ன?’ இப்படியெல்லாம் விசாரிக்கிறாராம். அவரா இப்படி, இல்ல… வேணும்னு எவனாவது போட்டு வாங்குறானா என்றெல்லாம் அச்சப்பட ஆரம்பித்திருக்கிறார்கள் அந்த விஐபிகள். உண்மையில் என்ன நடக்கிறது.

கடந்த சில காலமாகவே விஜய்யை சுற்றி சுற்றி சுழன்றடிக்கிறது பிரச்சனைகள். பொதுவாக தமிழ்சினிமாவில் யாருக்கு பிரச்சனை வந்தாலும், ஃபார்மாலிடிக்காகவாவது போன் செய்து துக்கம் விசாரிப்பது வழக்கம். ஆனால் விஜய்க்கு நேர்ந்த கொடுமைகளை பற்றி யாரும் வாயையும் திறக்கவில்லை. அட்லீஸ்ட் தொலைபேசியில் வந்து ஆறுதலும் கூறவில்லை. நாம என்ன செய்யுறமோ, அதுதானே நமக்கு திருப்பி வரும் என்பதை (சற்று தாமதமாக) புரிந்து கொண்ட விஜய்யிடம்தான் இத்தகைய மாற்றம்.

அதான் வந்துட்டாருல்ல… அப்புறமும் ஏன் பழசை பற்றி பேசிக்கிட்டு. எல்லாரும் சத்தமா சந்தோஷமா ஒரு முறை சிரிங்க பார்க்கலாம்!

Conspicuous change in Vijay

Ilayathalapathi Vijay though a mass hero, will always be aloof and will focus will be elsewhere without paying attention to his surroundings. This is his normal style. However, this has changed very conspicuously to the delight of everyone in Kollywood. Of late, Vijay picks up his phone and speaks to biggies in the industry, enquiring about their welfare, their projects, so on and so forth. This has become a pleasant surprise for all who knew Vijay. Though Vijay has not received much support from the industry when Thalaivaa controversy erupted, he seemed to have given a deep thought over it. Ignoring those past, he is now a changed man, for the good. And ready to socialize!

Read previous post:
கண்ணில் தெரியுமா கடனில்லா உலகம்? கவலையில் செல்வராகவன்!

நீச்சல் தெரியாமல் மூழ்கினாலும் சரி, நீச்சலை ரசித்து முங்கினாலும் சரி, தலையை மேலே உயர்த்தும்போது ஒரு கூட்டமே சேர்ந்து கல்லை போட தயாராக இருந்தால், மண்டை காலி....

Close