திடீர் கோபம்… கோபத்தில் கதவை சாத்திக் கொண்ட தமன்னா… உதவி இயக்குனர்கள் அலறல்!
சினிமாவில் உதவி இயக்குனர்களை போல சர்வ புலன்களையும் அடக்க வேண்டிய ஜாதி வேறொன்று இல்லை. அவர்கள் சிரித்தாலும் தப்பு. சிரிக்காவிட்டாலும் தப்பு என்பது போல சுள்ளென்று விழுவார்கள் அவர்களை வேலைக்கு வைத்திருக்கிற இயக்குனர்கள். எந்த நேரம் தங்கள் இயக்குனர் நல்ல மூடில் இருப்பார், அவரிடம் பேசலாம் என்று தவியாய் தவிக்கும் உதவி இயக்குனர்கள் இங்கே ஏராளமாக இருக்கிறார்கள். ஒரு சில இயக்குனர்கள் மட்டுமே தன்னிடம் பணியாற்றும் உதவி இயக்குனரை நண்பனை போல பாவிப்பார். ஒரு இயக்குனரிடம் அடி உதை வாங்கி மேலே வரும் இயக்குனர்கள் ஒரு பொசிஷக்கு வந்த பின்னால் தான் பட்ட துன்பங்களை எல்லாம் தன்னிடம் வேலைக்கு சேரும் உதவி இயக்குனர் முதுகில் ஏற்றி வைப்பார்கள். சரி, போகட்டும்… நாம் சொல்ல வந்த விஷயம் அதுவல்ல. வேறு….
வீரம் படத்தில் தமன்னாவிடம் மாட்டிக் கொண்ட உதவி இயக்குனர்களின் கண்ணீர் கதை இது. படப்பிடிப்பு சமயத்தில் அநேமாக எல்லா முன்னணி நடிகைகளும் கட் சொல்லிய அடுத்த வினாடி கேரவேனுக்குள் புகுந்து கொள்வார்கள். மறுபடியும் அவர்களை ரதத்திலிருந்து இறக்கி ஷாட்டில் நிற்க வைப்பதற்காக கால் கடுக்க, கேரவேன் படியறுகே நிற்கும் துர்பாக்கியசாலிகள்தான் இந்த உதவி இயக்குனர்கள். ஆனால் வீரம் யூனிட்டில் தமன்னா ரொம்பவே பிரண்ட்லியாக நடந்து கொண்டாராம். அது தவறோ, சரியோ? ஆனால் அங்கு நடந்த ஒரு சம்பவத்தால் பதறி பதறி பேன்ட்டிலேயே ‘உச்சா’ போகிற நிலைக்கு ஆளானார்கள் உதவி இயக்குனர்கள்.
ஷாட் பிரேக்கில் தனியாக சேரை போட்டு உட்கார்ந்திருந்த தமன்னா, அப்படியே அங்கு நடமாடிக் கொண்டிருந்த உதவி இயக்குனர்களிடம் பேச்சு கொடுத்தாராம். பேச்சு மெல்ல மெல்ல அரட்டையாக மாறியிருக்கிறது. பேச்சுவாக்கில், ‘நான் நல்லா சமைப்பேன் தெரியுமா ?’என்றாராம் தமன்னா. ஆர்வத்துடன் அவரது சமையல் அனுபவத்தை கேட்க ஆரம்பித்தார்கள் உதவி இயக்குனர்கள். நான் வட்டமா தோசை சுடுவேன் என்று அவர் சொல்ல, பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஒரு உதவி இயக்குனர் சும்மாயில்லாமல், தோசைன்னாலே வட்டமாதான் இருக்கும். மேலே சொல்லுங்க என்று கூறிவிட்டார் கேஷுவலாக. கேட்டுக் கொண்டிருந்த மற்றவர்கள் கொல்லென்று சிரித்தார்கள். அவ்வளவுதான்… தான் அவமானப்படுத்தப்பட்டதாக கருதினாராம் தமன்னா.
படக்கென எழுந்து கேரவேனுக்குள் போய் கதவை சாத்திக் கொண்டார். அதிர்ச்சியில் உறைந்து போன உதவி இயக்குனர்கள் பதறியபடி பின்னாலேயே ஓடியிருக்கிறார்கள். தமன்னா கோபித்துக் கொண்டதை கூட சமாளித்துவிடலாம். இதனால் படப்பிடிப்புக்கு ஏதும் பிரச்சனை வந்துவிடக் கூடாதே என்பதுதான் அவர்களது அச்சம். இந்த விஷயம் டைரக்டருக்கு தெரிந்தால் என்னாகும் என்பது இன்னொரு அவஸ்தை. எப்படியோ வாசலிலேயே நின்று வெளியிலிருந்தபடியே மன்னிப்பு கேட்டு, அரை மணி நேர அவஸ்தைக்கு பிறகு பிரச்சனையிலிருந்து மீண்டார்களாம் அத்தனை பேரும்.
அதற்கப்புறம் ஒருவரிடமும் முகம் கொடுத்துக் கூட பேசவில்லையாம் தமன்னா. ஆமா…? தோசைன்னா வட்டமாதானே இருக்கும்!
Tamannah shock treatment to Assistant Director during Veeram shoot
Contrary to the habits of leading heroines, Tamannah was very friendly and cooperative during the Veeram shoot. She would engage in casual talks with assistant directors and other team members. While she was in that casual mood, she was telling the unit members that she was a good cook too. But an assistant director intervened to remark something which made the other members to laugh spontaneously. This has hurt Tamannah who rushed back to her Caravan. Shocked by her act, Assistant Director who made the remark, feared he had to invite the wrath of the director in case Tamannah makes a scene at the shooting spot stopping the shooting. So he literally waited at the door of the caravan and apologies to Tamannah for his remark. Satisfied, Tamannah resumed shooting without giving any trouble to the assistant director.
சினிமாவில் உதவி இயக்குனர்களை போல சர்வ புலன்களையும் அடக்க வேண்டிய ஜாதி வேறொன்று இல்லை. அவர்கள் சிரித்தாலும் தப்பு. சிரிக்காவிட்டாலும் தப்பு என்பது போல சுள்ளென்று விழுவார்கள் அவர்களை வேலைக்கு வைத்திருக்கிற இயக்குனர்கள். எந்த நேரம் தங்கள் இயக்குனர் நல்ல மூடில் இருப்பார், அவரிடம் பேசலாம் என்று தவியாய் தவிக்கும் உதவி இயக்குனர்கள் இங்கே ஏராளமாக இருக்கிறார்கள். ஒரு சில இயக்குனர்கள் மட்டுமே தன்னிடம் பணியாற்றும் உதவி இயக்குனரை நண்பனை போல பாவிப்பார்.
thankyou sir