திருப்பதியில் தண்ணீர் தட்டுப்பாடு: பக்தர்கள் கடும் அவதி

திருப்பதியில் தண்ணீர் தட்டுப்பாடு இப்போது தலைதூக்க தொடங்கி உள்ளது. அடுத்த மாதம் நிலைமை மேலும் மோசமாகும் என கருதப்படுகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் வருகிறார்கள். வார விடுமுறை நாட்களில் 1 லட்சத்துக்கும் அதிகமாக பக்தர்கள் வருவது உண்டு.

இவர்களுக்கு தினமும் 32 லட்சம் கலோரி தண்ணீர் தேவைப்படுகிறது. மழை காலங்களில் 1369 மில்லி மழை பதிவாகும். ஆனால் இந்த ஆண்டு 1056 மில்லி மழையே பெய்தது.

இதனால் திருமலையில் உள்ள பல நீர்த்தேக்கங்களில் தண்ணீர் குறைந்து வருகிறது. ஆகாய கங்கை வறண்டு விட்டது. கோகர்ப்பம் நீர்த்தேக்கம் குட்டைபோல் காட்சி அளிக்கிறது. பாபவிநாசனம், பகபுதாரா நீர்த்தேக்கத்தில் 35 சதவீதம் தண்ணீரே இருப்பு உள்ளது. இதனால் திருமலையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

இதனால் பக்தர்களுக்கு வழங்கும் தண்ணீர் அளவு குறைக்கப்பட்டு உள்ளது. திருமலையில் உள்ள விடுதிகளில் தினமும் 35 ஆயிரம் பக்தர்கள் தங்க அறைகள் உள்ளது. இவர்களுக்கு 24 மணி நேரமும் தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. தற்போது இது பாதியாக குறைக்கப்பட்டு உள்ளது.

இதேபோல் தெருக்குழாய்களில் விநியோகிக்கும் தண்ணீரும் குறைக்கப்பட்டு உள்ளது. பாலாஜி நகரில் வசிக்கும் பொதுமக்களுக்கு வாரத்துக்கு ஒரு முறையே தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது.

அடுத்த மாதம் (மே) தண்ணீர் தட்டுப்பாடு மேலும் தீவிரமாகும் எனவும் பக்தர்கள் அவதிப்படக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தவிர்க்க தேவஸ்தானம் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
கம்ப்யூட்டர்முன் அதிக நேரம் உட்காரும் சிறுவர்களுக்கு எலும்புகள் பலவீனமாகும்: அதிர்ச்சி தகவல்

தற்காலத்திய சிறுவர்கள் வெளியிடத்தில் ஓடி, ஆடி விளையாடுவதைவிட கம்ப்யூட்டரின்முன் நேரத்தை செலவிடுவதே அதிகமாக உள்ளது. இவ்வாறு உட்கார்ந்த நிலையில் அதிக நேரத்தை செலவிடும் சிறுவர்களின் எலும்புகள் பலவீனமாகக்...

Close