திருமணம் எனும் நிக்காஹ் பிரஸ்மீட்டில் நஸ்ரியா எனும் ‘வைட்டமின் ஆங்கிரி! ’

ஒரு பெரும் ரணகளத்திற்கு பிறகு நஸ்ரியா பிரஸ்சை சந்திக்கிறார் என்றால், கேள்வியில் மிளகாய் பொடியை தடவிக் கொண்டு வந்துவிட மாட்டார்களா நிருபர்கள்? இன்றும் அப்படிதான். நெடியுடன் கூடிய மிளகாயுடன் நிருபர்கள் வந்திருக்க, ‘அதுக்கெல்லாம் வேற ஆள பாருங்க’ டைப்பில் பதில் சொல்லி அத்தனை பேருக்கும் மஞ்சத் தண்ணி கொடுத்தார் நஸ்ரியா. நடிக்க வரும்போதே ‘வைட்டமின் ஆங்கிரி’யோடு வந்த பெண் இவர்தான் போலிருக்கிறது!

‘திருமணம் எனும் நிக்காஹ்’ படத்தின் பிரஸ்மீட்தான் அது. கேள்வி நேரம் துவங்க, எடுத்த எடுப்பிலேயே நஸ்ரியாவை நோக்கி பாய்ந்தது கேள்வி. ‘நையாண்டி படத்தில் நீங்க பிரிச்சனை செய்த பிறகு உங்களுக்கு வாய்ப்பு குறையுதுன்னு ஒரு பேச்சு இருக்கே, அது நிஜமா?’ இதுக்கெல்லாம் அசருகிற ஆள் நான் இல்லே என்பது போல பேச ஆரம்பித்தார் நஸ்ரியா. ‘இது திருமணம் எனும் நிக்காஹ் படத்தை பற்றிய பிரஸ்மீட். அது பற்றி மட்டும் கேளுங்க. பதில் சொல்றேன். வேற கேள்விகளுக்கு பதில் சொல்ற இடம் இது இல்லை’ என்றார் அலட்டிக்கொள்ளாமல். சரி, இந்த படத்தின் டைரக்டரோடு ஒண்ணும் பிரச்சனை இல்லையே? நிச்சயமா இல்லே. ரொம்ப கம்பர்டபுளா இருந்துச்சு. அதுமட்டுமில்ல, நான் தமிழ்ல நடிக்க ஒப்புக் கொண்ட முதல் படம் இதுதான். ஆனால் மற்ற படங்கள் முந்திகிச்சு. இது கொஞ்சம் தாமதமா வருது என்றார் நஸ்ரியா.

ஏன்ங்க இவ்வளவு தாமதம்? இயக்குனர் அனிஸ்சிடம் கேட்டோம். இது முஸ்லீம் மற்றும் இந்து திருமண சடங்குகள் பற்றிய படம். அதுக்காக பண்டிகை நாட்களில் நிஜமாகவே ஷுட் பண்ண காத்திருக்க வேண்டியதாப் போச்சு. கோழிக்கோட்டில்  நடைபெறும் ரம்ஜான் தொழுகையை நேரடியாக படம் பிடிச்சுருக்கோம். சுமார் நாலாயிரம் பேர் தொழுகை செய்வதை அவ்வளவு அழகா படம் பிடிச்சுருக்கோம். அது மாதிரி இந்துக்களின் முக்கியமான பண்டிகையான ஆவணி அவிட்டம் விழாவை ஷுட் பண்ண திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், மேற்கு மாம்பலம், ஸ்ரீபெரும்புதுர்னு அலைஞ்சு திரிஞ்சு அதையும் அப்படியே ஷுட் பண்ணியிருக்கோம். இதுக்கெல்லாம் கால தாமதம் ஆகுமல்லவா என்றார் அனிஸ்.

படத்தை முஸ்லீம் அமைப்புகளிடம் போட்டு காட்டுவீங்களா? இந்த கேள்விக்கு மட்டும் சற்று உரிமையோடு பதில் சொல்ல ஆரம்பித்தார் அனிஸ். இந்த படத்தில் நான், நஸ்ரியா, மியூசிக் டைரக்டர் ஜிப்ரான் ஆகிய மூன்றுபேருமே முஸ்லீம்கள். படத்தில் எவ்வித தப்பான கருத்தும் இடம் பெறாது என்பதை இதிலிருந்தே புரிந்து கொள்ளலாம். அதுமட்டுமல்ல, நான் இரண்டு சமூகத்திலும் இருக்கிற திருமண வைபவங்களை பற்றி மட்டும்தான் சொல்லியிருக்கேன். சர்ச்சைக்குரிய எதையும் பேச வரவில்லை. இந்து மத திருமணத்தில் இருக்கும் சைவ உணவையும், முஸ்லீம் திருமணத்தில் இருக்கும் அசைவ பிரியாணியையும் சொல்லியிருக்கேன். பிரியாணியை ருசிச்சு சாப்பிடுற நமக்கு, அது முதன் முதலில் எங்கு கண்டு பிடிக்கப்பட்டது. யாரால் இந்தியாவுக்கு வந்தது என்பதெல்லாம் தெரிஞ்சுருக்க வாய்ப்பில்லை. நான் அதையும் கூட இந்த படத்தில் சொல்லியிருகேன் என்றார்.

நஸ்ரியா மீது இன்டஸ்ட்ரி என்ன மரியாதை வைத்திருக்கிறதோ, இந்த படம் வெளிவந்த பின் அவரை மெல்ல திறந்தது கதவு படத்தின் அமலாவாக கொண்டாடுவார்கள் ரசிகர்கள். ஏனென்றால் அந்த பர்தாவும், அதற்குள்ளிருந்து எட்டிப்பார்க்கும் அந்த கண்களும்…!

வா வெண்ணிலா உன்னைதானே வானம் தேடுதே….

Thirumanam Ennum Nikkah team meets the press

The Thirumanam Ennum Nikkah team met the press today with Nazriya and director Anees played the perfect host. As expected the press shot their first arrow towards Nazriya about Naiyaandi controversy. But Nazriya handled the question effortlessly saying that the meet is about the film Thirumanam Ennum Nikkah and hence it is not proper place to answer other questions. Asked about working in the film, she said that TEN was her first film in Tamil though other films were released early due to delay in production.

When asked about the time delay in the production of the film, director Anees said that in order to show authentic celebrations of festivities of two communities Muslim and Hindu, he had to wait for the festivals to be celebrated to shoot them on the spot. He said he had shot Ramzan prayers at Kolkatta where over 4000 people prayed. Similarly he had shot the Avani Avittam sacred thread ceremony at places like Triplicane, Mylapore, T. Nagar and Sri Peramabadur. So there was a delay in completing the film.

Quizzed about any controversy he anticipates, he confessed that he, the lead actress Nazriya and the music director Gibran are Muslims and there would be no chance of any controversy arising out of us. He also mentioned that this film would be a gateway for Nazriya as her performance would be appreciated by everyone, as how Amala was appreciated for her performance in Mella Thirandhadhu Kathavu.

 

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
திருமணம் எனும் நிக்காஹ் பிரஸ்மீட் ஸ்டில்ஸ்

[nggallery id=103]

Close