தீவிரசிகிச்சை பிரிவில் பாலுமகேந்திரா -கவலையில் திரையுலகம்

திடீரென இயக்குனர் பாலுமகேந்திரா உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர், தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. அவசர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டிருக்கும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முன்பு ‘அது ஒரு கனாக்காலம்’ படப்பிடிப்பு நேரத்தில் அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டது. அப்போது அவர் விஜயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் மீண்டு வருவார் என்கிற நம்பிக்கையில் திரையுலகம் காத்திருந்தது. அவர்களின் நம்பிக்கையை பொய்யாக்காமல் மீண்டு வந்தார் அவர். இந்த முறையும் அதே மருத்துவமனையில்தான் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். முன்பு போலவே மீண்டு வர வேண்டும் என்பதே அனைவரது பிரார்த்தனையாகவும் இருக்கிறது.

திரையுலகத்தை சேர்ந்த பல்வேறு இயக்குனர்களும், தொழில் நுட்ப கலைஞர்களும் மருத்துவமனைக்கு விரைந்த வண்ணம் இருக்கிறார்கள்.

Read previous post:
குறும்பட இயக்குநர்களின் சினிமா கனவு தகர்கிறதா? – முருகன் மந்திரம்

தமிழ் சினிமாவில் அவ்வப்போது பல புதிய, புதிய அலைகள் உருவாகும். பின் அந்த அலை இன்னொரு அலையில் அப்படியே காணாமல் போகும். அல்லது அந்த அலையே தன்னைத்தானே...

Close