தொலைச்சுப்புடுவேன் தொலைச்சு… -ஹன்சிகாவை எச்சரித்த தயாரிப்பாளர்

‘சீதாராம கல்யாணம் லங்கலோ’ என்ற தெலுங்கு படத்தை தமிழில் ‘ரவுடிக் கோட்டை’ என்ற பெயரில் டப் செய்து வெளியிடுகிறார்கள். இதில் ஹீரோயினாக நடித்திருக்கிறார் ஹன்சிகா மொத்வானி. திடீரென இப்படத்தை தமிழில் வெளியிடக் கூடாது. அப்படி வெளியிட்டால் நான் கோர்ட்டுக்கு போய் தடை கேட்பேன் என்று கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டார் ஹன்சிகா.

இந்த படம் வெளிவந்தால் அவருக்கென்னவாம்?

இதில் இச் இச் என்ற ஒரு பாடலில் செம கிளாமராக நடித்திருக்கிறாராம். அதனால்தான் இந்த லபோ திபோ. இவரது சார்பில் நடிகர் சங்கத்தில் புகாரும் செய்யப்பட்டிருக்கிறது. இந்த செய்தியை அறிந்த ‘ரவுடிக் கோட்டை’ படத்தின் தயாரிப்பாளர் எஸ்.சுந்தரலெட்சுமி ‘தொலைச்சுப்புடுவேன் தொலைச்சு’ என்கிற ரேஞ்சில் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அதில், ‘சீதாராம கல்யாணம் லங்கலோ’ படத்தின் தயாரிப்பாளருடன் நாங்கள் மொழி மாற்ற ஒப்பந்தத்தை தெளிவாக போட்டிருக்கிறோம். இதில் ஏதாவது பிரச்சனை என்றால் அவர் தெலுங்கு தயாரிப்பாளர் மீதுதான் வழக்கு போட வேண்டும். அதை விட்டுவிட்டு இங்கே எங்களிடம் பிரச்சனை செய்யக் கூடாது. நடிகர் சங்கத்தில் கொடுத்திருக்கும் புகாரை வாபஸ் வாங்க வேண்டும். இல்லையென்றால் ஹன்சிகா மீது நான் வழக்கு தொடருவேன் என்று கூறியிருக்கிறார்.

உருண்டு புரண்டு நடிக்கும் போதெல்லாம் சும்மாயிருந்து விட்டு, வேடிக்கை பார்க்கிறவர்களிடம் வந்து ‘ஏண்டா பார்த்தே…’ என்று வம்புக்கு வருவதுதான் ஏனென்றே தெரியாத எசகு பிசகு!

For English users:

Producer warns Hansika to take her to court

Hansika who was upset that without her permission the makers of Seetharamula Kalyanam Lankalo are dubbing it in Tamil, with the title ‘Rowdy Kottai’. It was also said that she filed a complaint with SIFCC on the producer of the Tamil version. But the little bird from industry source says the main cause for the upset for Hansika, must have been a song sequence in which Hansika reported to have done glamourous looks and acts, though make her fans feel happy, might upset people concerned. The producer of Tamil remake, S. Sundaralakshmi, in a statement issued has said, “we have entered into an agreement explicitely with Telugu Producers’ of the film, regarding dubbing rights. If Hansika is upset she should take up the issue with Telugu producers. Instead if she raises her banner of revolt, then we will have no option but to take her to the court”. Well! It is very basic philosophy to face the enemy directly who shot the arrow, instead of pointing accusing fingers at the arrow.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
வணக்கம் சென்னை -ல் அனிருத்தின் அசத்தல் டான்ஸ்

Close