தோண்டப்படும் இலங்கை அமைச்சரின் குடும்பக் கல்லறை

முன்னாள் அமைச்சர் ஒருவரின் குடும்ப மயானத்தை விசேட அதிரடிப்படையினர் தோண்டிக்கொண்டிருக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் அமைச்சர் கே.டப்ளியு. தேவநாயகத்தின் குடும்ப மயானமே தற்போது தோண்டப்பட்டுக்கொண்டிருக்கின்றது.

கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி-பதுளை வீதியிலுள்ள அவரது குடும்ப மயானமே தோண்டப்பட்டுக்கொண்டிருக்கின்றது.

அந்த மயானத்திற்குள் பெருந்தொகையான ஆயுதங்கள் புதைத்து வைக்கப்பட்டிருக்கலாம் இன்றேல் பெருந்தொகையில் பணம் புதைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என கிடைத்த தகவலையடுத்தே விசேட அதிரடிப்படையினர் மயானத்தை தோண்டிக்கொண்டிருக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
திஹார் சிறையில் முன்னாள் உலக அழகி

அமெரிக்காவை சேர்ந்த முன்னாள் உலக அழகி ஒலிவியா, டெல்லி திகார் சிறையை சுற்றிப்பார்த்தார்.அமெரிக்காவை சேர்ந்தவர் முன்னாள் உலக அழகி ஒலிவியா பிரான்செஸ் கல்போ(21). கடந்த ஆண்டு உலக...

Close