த்ரிஷாவை ஏன் தேர்ந்தெடுத்தேன்? விஷால் விளக்கம்

அஜீத் ரேசுக்கு போனார். தயாரிப்பாளர்களின் பிபி தாறுமாறாக ஏறியது. போன இடத்தில் உருண்டு விழுந்தால் என்னாவது? அவரை நம்பி நாம் போட்ட பணம் என்னாவது என்கிற அச்சம்தான் அதற்கெல்லாம் காரணம். ஆனால் அவரைப்போலவே நடிப்பை தொழிலாக கொண்டிருக்கும் சுமார் ஒன்றரை டசன் ஹீரோக்கள் கிரிக்கெட் ஆட கிளம்பியிருக்கிறார்கள். ஆனால் ஒருவராவது முணுமுணுக்க வேண்டுமே? ம்ஹும். மேட்ச் எப்போ சொல்லுங்க? நாங்களும் வர்றோம் என்கிற அளவுக்கு கொண்டாடுகிறார்கள் இவர்களை. அதற்கு காரணம் கிரிக்கெட் மோகமா, அல்லது இவர்கள் மட்டை சுற்றும் லாவகமா? ஒன்றும் புரியவில்லை. ஆனால் ஒன்று புரிகிறது… சினிமாவுக்கு கொஞ்சம் சளைக்காமல் பணத்தை கொட்டுகிறது இந்த நட்சத்திர கிரிக்கெட்.

இன்று இந்த சிசிஎல் போட்டி தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்தார்கள் விஷால், த்ரிஷா மற்றும் தமிழ்சினிமாவில் மட்டை துக்கிய அத்தனை ஹீரோக்களும். டீம் கேப்டன் என்ற முறையில் பேச ஆரம்பித்தார் விஷால். நான் என் பசங்ககிட்ட சொல்ற முக்கிய விஷயம் இது ஒண்ணுதான். ஆடும்போது நாம் நடிச்சுட்டு இருக்கிற படங்களையும், அதற்காக பணம் போட்டிருக்கும் தயாரிப்பாளர்களையும் மனசுல வச்சுகிட்டு ஆடுங்க. இஞ்சுரி வராத மாதிரி ஆடுங்க என்பதுதான். சமீபத்தில் மும்பை அணியை நாங்க ஜெயிச்சதை நீங்க பார்த்திருப்பீங்க. விரைவில் பெங்களூருல மேட்ச் இருக்கு. கன்னட திரைப்பட நட்சத்திரங்களோட ஆடப் போறோம் என்றார். (சென்னையில் நடக்கவிருந்த இந்த மேட்ச் தவிர்க்க முடியாத காரணத்தால் பெங்களூருவுக்கு ஷிப்ட் ஆகியிருக்கிறது)

இந்த மேட்சில் தமிழ் பட ஹீரோக்களின் அணியான ரைனோஸ் டீமின் பிராண்ட் அம்பாசிடர் த்ரிஷாதான். விஷாலிடம், எத்தனையோ ஹீரோயின்கள் உங்களுக்கு பழக்கமா இருக்காங்க. ஏன் த்ரிஷாவை தேர்ந்தெடுத்தீங்க என்றால், சிரித்துக் கொண்டே பதில் சொல்கிறார். இது என்னோட விருப்பம் மட்டுமல்ல, இந்த டீமின் ஸ்பார்ன்சர்ஸ் விருப்பமும்தான். அவங்களுக்கும் கிரிக்கெட் மேல பெரிய ஆர்வம் இருக்கு. அதனாலயும் என்றார்.

உங்க டீமிலிருந்து இந்திய கிரிக்கெட் அணிக்கு ஒருவரை அனுப்பணும்னு நிர்பந்தம் வந்தால் யாரை அனுப்புவீங்க என்ற கேள்விக்கு பட்டென்று பதில் சொன்னார் விஷால். ‘விக்ராந்த்!’ அப்படியே இன்னொருவரையும் அனுப்ப தகுதியானவர் என்று சர்டிபிகேட் கொடுத்தார். அவர்? விஷ்ணு.

இவங்க ரெண்டு பேரும் ஆடும்போது நாங்க இன்னும் கொஞ்ச நேரம் ஆட மாட்டாங்களா என்பது மாதிரி ரசிப்போம் என்றார்.

ஏன் ஆர்யா ஆடல? என்கிற கேள்விக்கு ரொம்ப எக்ஸ்க்ளுசிவாக விஷால் சொன்னது இதுதான். அவர் பிரியாணியை ரொம்ப சாப்பிட்டு சாப்பிட்டு முழங்கால்ல ஆபரேஷன் செய்ய வேண்டியதா போச்சு. அதனால் அவரால் ஆட முடியாது. போக போக சேர்த்துக்குவோம் என்றார்.

பிரியாணி ஓவரா சாப்ட்டா இப்படியெல்லாமா நடக்கும்?

Trisha is the unanimous choice for Chennai Rhinos – Vishal

After beating Mumbai Heroes at Mumbai, in the Celebrity Cricket League’s 4th edition, the team Chennai Rhinos captained by Vishal returned to Chennai. The team along with their brand ambassador met the press exclusively to speak about CCL and the matches.

Speaking to the press Vishal said that while playing he has asked his members (all are doing hero roles in films) to keep in mind to avoid injury to their body so that it would not cause anxiety to the respective producers. He said the members were thrilled when they won Mumbai heroes at Mumbai. “We will be playing our next match at Bengaluru against Karnataka Bulldozers” Vishal added, (the match was to have been played at Chennai is shifted to Bengaluru now).  

When quizzed about naming Trisha as brand Ambassador, Vishal explained that it was the unanimous choice from both team members as well as the sponsorers. Also Trisha has a keen interest in cricket as well, Vishal explained.

He said his choice would be Vikranth and Vishnu if he were asked to select two crickets for Indian team. It will be a pleasure watching them playing, he added. When asked about Arya missing in the team, he said that he will participate in the later games.  

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
வரிஞ்சு கட்டிக்கிட்டு எழுதினா, உரிச்சு வச்சு உப்பு தடவுறாங்களே ?

வரிஞ்சு கட்டிக்கிட்டு எழுதினா, உரிச்சு வச்சு உப்பு தடவுறாங்களே என்று பின்னாளில் வருந்த வேண்டியிருக்கும். ஆனால் சிரித்துக் கொண்டே சண்டை போட்டார் கேபிள் சங்கர். வலையுலகத்தில் கேபிளின்...

Close