த்ரிஷ்யம்… கமல்… கவுதமி! முடிவுக்கு வந்தது முக்கியமான ரேஸ்?

கமல் நடிக்கும் ‘உத்தமவில்லன்’ படம் இப்போதுதான் துவக்க நிலையில் இருக்கிறது. ஆனால் அடுத்ததாக அவர் நடிக்கவிருக்கும் ‘த்ரிஷ்யம்’ படம் பற்றிய தகவல்கள் உத்தம வில்லனை முந்திக் கொண்டு மூக்கை நீட்ட ஆரம்பித்திருக்கிறது. இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்துவிட வேண்டும் என்று மீனாவில் ஆரம்பித்து சிம்ரன் வரைக்கும் பேராடிக் கொண்டிருக்கிறார்கள். ஜனாதிபதி ரெகமென்ட்டேஷன் வரைக்கும்தான் போகவில்லை. மற்றபடி யார் யாரையோ பார்த்து எப்படியெப்படியோ பேசி அந்த வேடத்தை கைப்பற்றிவிட முனைகிறார்கள். அந்தளவுக்கு மக்கள் மனதில் நிற்கக் கூடிய கேரக்டராம் அது.

ஆனால் கமல் மனசில் யாரோ? இப்படியெல்லாம் கவலைப்பட்டு கர்சீப் தேட வேண்டியதில்லை அவரது ரசிகர்கள்.

பக்கத்திலேயே துளசி செடியை வைத்துக் கொண்டு கஷாயத்துக்கு கையேந்துவானேன்? தனது துணைவியார் கவுதமியை அந்த கேரக்டரில் நடிக்க வைக்க விரும்புகிறாராம் கமல். வெகு காலமாகவே சினிமாவை தள்ளி வைத்திருக்கும் கவுதமிக்கும் இது பொருத்தமான ரோல்தான். த்ரிஷ்யம் படத்தை பார்த்து பார்த்து வியந்தவர்களில் கவுதமியும் ஒருவர் என்பதால் இந்த யோசனைக்கு அவரும் சரி சொல்வார் என்பது ஒரு புறம் இருக்கட்டும்…

கமலின் இந்த யோசனை இன்னும் யோசனை லெவலிலேயே இருப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து மீனாவும் சிம்ரனும் அந்த கேரக்டரில் நடித்தே தீருவது என்று கமலை கரைக்க முயற்சித்துக் கொண்டு இருக்கிறார்களாம்.

நம்ம ஓட்டு கவுதமிக்குதான்!

Kamal has other plans for Drishyam remake!

Kamal’s Uthama Villain directed by Ramesh Arvind had started rolling at Bengaluru from 3rd March. It is said that the film shoot will be one straight and long schedule covering about 100 days, so that Kamal can focus his attention on the remake of popular Malayalam film Drishyam, from June onwards.

While Meena and Simran are putting all their efforts to get on board in the remake of Drishyam, it is heard that Kamal has other plans. He is considering Gauthami to play the lead character in the remake. Gauthami too had seen and liked the film. So her consent could be inferred. Though Kamal has not yet decided either on Gauthami or any other female lead, it is learnt that Meena and Simran are working overtime to get the role.

Like in sports let the better artiste wins the race!

3 Comments
  1. kjkl says

    kuppan suppanukku endraall vappaatti,,,kamalukku thunaiviyaar…………?

  2. kk says

    Supera kamalukku sombu thookuringa.simrana nadikka vacha sarika madhiri namalayum veeta vittu veratiduvarunnu ushara kamalin “thunaiviyar” mudivu eduthitanga.

  3. amar says

    Thulasi chediya..?? mudhal muraya unga siteukku varaen. ennada site nalla irukaennu pathaen. kadaisilla patha kamal kitta kasu vangikittu news podra pathu sitella neengallum onnu. intha newsa nan dinamalarleye padichikiraen.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
துணிச்சலுக்கான சர்வதேச விருதுக்கு இந்திய பெண் தோ்வு

துணிச்சல் மிக்க பெண்களுக்கு வழங்கப்படும் சர்வதேச உயரிய விருது இந்த ஆண்டு இந்திய பெண் லட்சுமிக்கு வழங்கப்படுகிறது. ஆசிட் தாக்குதலில் பாதிக்கப்பட்ட லட்சுமியின் பெயரை இந்த விருதுக்காக...

Close