நடன இயக்குனர் சம்பத்ராஜ் இயக்கும்  “ இனி அவனே “  சந்தோஷ் கதாநாயகன்

தமிழ்தாய் கிரியேசன்ஸ், ANA மூவி கிரியேசன்ஸ் பட நிறுவனங்கள் சார்பில் ஆர்.மணிகண்டன் நசீர் அகமது இருவரும் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “இனி அவனே” என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் சந்தோஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் ஒரு காதல் செய்வீர், காதல் செய்ய விரும்பு, திரு ரங்கா, மிட்டாய், காதலி என்னை காதலி போன்ற படங்களில் நடித்தவர்.

கதாநாயகியாக ஆஷ்லீலா நடிக்கிறார். இன்னொரு  நாயகனாக சசி, இன்னொரு நாயகியாக ரூபி  நடிக்கிறார்கள். மற்றும் பவானி ரெட்டி, புதுமுகம் நாகேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு   –     T.சேகர்

இசை   –  எஸ்.எஸ்.சூர்யா

பாடல்கள்   –  கலைக்குமார், பால்முகிலன்

கலை  –   முருகமணி

எடிட்டிங்    –  R.T.அண்ணாதுரை

நடனம்    –  சம்பத்ராஜ்

தயாரிப்பு   –  R.மணிகண்டன், A.நசீர்அகமது

எழுதி இயக்குபவர்   –   நடன இயக்குனர் சம்பத்ராஜ்

படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்..

தங்களுடைய காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்துகொள்ள தயா – ஜூலி இருவரும் முடிவு செய்கிறார்கள்.

அவர்களுக்கு ரோகன், ஆயிஷா உதவுகிறார்கள். ரயிலில் அமைச்சரின் தங்கை காமினியை சந்திக்கிறனர். பெங்களூரில் கல்யாணம் செய்துகொள்ள முடியாமல் போக காமினியின் உதவியை நாடுகிறனர். ஆனால் அந்த காதலர்களை ஒன்று சேர விடாமல் காமினி தடுக்கிறார். ஏன் எதற்கு என்பது தான் திரைக்கதை.

ஆட்டம், பாட்டம், ஆக்ஷன் என விறுவிறுப்பான படமாக இருக்கும் என்றார் இயக்குனர் சம்பத்ராஜ்  இவர் ரஜினி நடித்த வீரா, தேசிய விருது பெற்ற காதல் கோட்டை, என் சுவாச காற்றே, மதுமதி , செம்பருத்தி, எங்கமுதலாளி, வல்லரசு, வியட்நாம் காலனி, மகாபிரபு, உள்ளதை அள்ளி தா, மேட்டுக்குடி, பார்வை ஒன்றே போதுமே உட்பட சுமார்480 படங்களுக்கு மேல் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றியவர். பல விருதுகளையும் பெற்றிருக்கும் இவர் இயக்கும் முதல் படம் இது. படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

Read previous post:
சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது- விமர்சனம்

பாக்கெட் வற்றிப்போன பேச்சுலர்களையெல்லாம் சென்னை, ‘பேச்சு’ இலர் ஆக்கி வேடிக்கை பார்க்கும்! அதுவும் உதவி இயக்குனர்களின் பாடு, செத்த எலிக்கு சீமந்தம் பண்ணுகிற கதைதான்! விக்ரமாதித்யனின் ‘வீடு...

Close