நடிகரின் பங்களா… – ஒரு விறுவிறு பிளாஷ்பேக்!

தி.நகர் பக்கம் போனால், டீக்கடையில்… தெரு முனையில்… பார் வாசலில்… பள்ளிக்கூட முக்கில்… கூடி கூடி நின்று குமுறிக் கொண்டிருக்கிறார்கள் வீட்டு புரோக்கர்கள்.

சங்க தலைவர் விருகை கண்ணன் வரைக்கும் விவரத்தை கொண்டு போக துடிக்கிறார்களாம். அவர்களிடம் முழியை உருட்டி ‘முடிஞ்சா பார்த்துக்கோங்க’ என்கிறாராம் அண்ணன்.

தாஜ்மஹாலின் அழகில் ஆயிரக்கணக்கான கொத்தனார்களின் கட்டை விரலும் ஒளிந்திருப்பதாக சொல்வார்கள் வரலாற்று பேராசான்கள். இதைப்போலவே அண்ணன் தம்பி நடிகர்கள் சென்னையில் கட்டி வரும் பிரமாண்ட அரண்மனையின் அஸ்திவாரத்திலும் புரோக்கர்களின் புலம்பல் சிக்கிக் கொண்டிருப்பதாக சீற்றம் ஒலிக்கிறது. பிரச்சனை என்னவாம்?

இடத்தை வாங்குவதற்கு முன்பு அதற்கு தரகு வேலை பார்த்த புரோக்கர்களுக்கு தர வேண்டிய உரிய தொகையை தராமல் சொற்ப தொகையை கொடுத்து ‘அவ்வளவுதான்’ என்று கூறிவிட்டாராம் நடிகர். இந்த தொகை கொஞ்ச நஞ்சம் என்றால் ‘அட போப்பா… ஒரு இசிஜி செலவுதானே அது, போகட்டும்’ என்று வேறு வேலையை பார்க்க போயிருப்பார்கள் புரோக்கர்கள். ஆனால் இந்த கமிஷன் தொகை பல லட்சங்களாம். அதனால்தான் இந்த குமுறல்.

பக்கத்து தெருவையும் தற்போது நடிகர் இருக்கும் தெருவையும் வளைத்துக் கட்டிதான் இந்த வீட்டை கட்டி வருகிறார் ஹீரோ. சுமார் 31 கோடி ரூபாய்க்கு விலை பேசப்பட்ட இந்த இடம், வேலு£ரை சேர்ந்த என்ஜினியரிங் கல்லு£ரி அதிபர் ஒருவருக்கு சொந்தமானது. முதலில் இப்படியொரு இடம் இருப்பதையே புரோக்கர் வட்டாரம்தான் ஹீரோவின் பார்வைக்கு கொண்டு வந்ததாம். பல கோடிகளுக்கு விலை பேசப்பட்ட அந்த நிலம் தொடர்பான எல்லா டாகுமென்டுகளையும் இந்த புரோக்கர்களே கொண்டு வந்து கொடுத்தார்களாம் நடிகரிடம்.

எல்லாவற்றையும் முறையாக சரிபார்த்த ஹீரோ, சரியாக இருப்பதாக திருப்தியானவுடன் பேச்சு வார்த்தையை ஆரம்பித்தார். பல கோடி நிலத்தை கடைசியாக 31 கோடி ரூபாய்க்கு பேசி முடிக்க உதவி செய்தது புரோக்கர் வட்டாரம். இந்த தொகைக்கு இரண்டு சதவீத புரோக்கர் கமிஷன் தர வேண்டும் என்றால் அதுவே அறுபது லட்சத்தை தொடும்.

அதற்குள் இடத்து சொந்தக்காரரிடம் பலமுறை போனில் பேசியும் நேரில் வரவழைத்தும் நெருக்கமாகிக் கொண்டாராம் ஹீரோ. உங்க வீட்டுக்கு விருந்து சாப்பிட வரணும். எப்போ வரட்டும்? என்று இவரே அவரிடம் கேட்க, வாயெல்லாம் பல்லாகிப் போனாராம் இடத்து ஓனர். ஒரு நல்ல நாளில் அவரது வீட்டுக்கு வருவதாக கூறிவிட்டார் ஹீரோ. ஹீரோ மட்டும் வருவார் என்று வீட்டு சொந்த பந்தங்கள் தடபுடல் ஏற்பாடுகளோடு காத்திருக்க, மனைவி, குழந்தைகள் சகிதம் போய் இறங்கினார் ஹீரோ.

லட்ச ரூபாய்க்கு ஆசைப்பட்டவருக்கு கோடி ரூபாய் கிடைத்த சந்தோஷம் அவர்களுக்கு. ஊரிலுள்ள அத்தனை பண்டிகையும் ஒரே நேரத்தில் வந்த மாதிரி அகமகிழ்ந்து போனார் இடத்தின் ஓனர். விருந்து, அரட்டை என்று ஒரு நாள் முழுக்க அங்கேயே கழித்தது ஹீரோவின் குடும்பம்.

மெல்ல பேச்சுக் கொடுத்த ஹீரோ, கடைசியாக பேசி முடிக்கப்பட்ட இடத்தின் மதிப்பான 31 கோடியை 28 கோடியாக குறைத்தாராம். மீண்டும் சென்னைக்கு திரும்பியவர், ஒரு நல்ல நாளில் இடத்தையும் தனது பெயருக்கு பதிவு செய்தார். புரோக்கர்களுக்கு கமிஷன் கொடுக்க வேண்டிய நேரம் அல்லவா?

அவர்களை அழைத்து 28 கோடி ரூபாய் நிலத்தை என்னிடம் 31 கோடியாக உயர்த்தி சொல்லீட்டீங்க. உங்களுக்கு எப்படி நிறைஞ்ச மனசோட கமிஷன் தர முடியும்? என்று கேட்க, ஆடிப்போனார்களாம் அவர்கள். ரொம்ப பேசுனீங்கன்னா போலீசுக்கு போவேன், கொடுக்கறதை வாங்கிட்டு கிளம்புங்க என்றாராம்.

பல சைபர்களை கழித்துவிட்டு சில சைபர்களோடு முடிந்தது கொடுக்கல் வாங்கல் சமாச்சாரம்.

திடுக்கிட்டு போன புரோக்கர்கள் அலறிக் கொண்டிருக்கிறார்கள். வாயே பிட் நோட்டீஸ், வழியெல்லாம் அவது£று என்று திரியும் புரோக்கர்களால் இதை தவிர வேறென்ன செய்துவிட முடியும் ஹீரோவை?

Popular hero does unpopular act!

A popular hero and his sibling also an actor are building a huge bungalow in Chennai. But it appears that they have not followed the ethical standards while acquiring the land for the purpose. The hero who bought this land through the help of the brokers, who not only identified the land, but also brought in and handed over all connected documents and did all hard work in the hope of getting a commission to take care of their ‘life-time’ living, have been virtually left in the lurch. As is shown in films our hero got the direct acquaintance with the owner of the land and bargained again with him, after the fixing the price (Rs.31 crores it is said) and reduced it to Rs.28 crores, by going to his place with his family, and spent an entire days to the delight of everyone in the owner’s house. Well, it is his smartness to do such a coup in getting a price reduction, but that does not mean he has to deprive of the ‘commission’ payable to the brokers, at least on the reduced amount of Rs.28 crores. When the brokers persuaded the actor, he is reported to have threatened them saying he would file a police complaint against them. The brokers are crest fallen and are helpless, as it would be next to impossible to challenge an influence personality in the society. “Kaalame idhu poyyada! Ingu Kasudhan Meyyada! (Destiny is farce but money is the ruse)

2 Comments
  1. sekar says

    பெரிய யோக்கியனுங்க மாதிரி அப்பனும் புள்ளைங்களும் மேடைல பேசுறானுங்க. இவனுங்க அறகட்டளை ஆரம்பிச்சதே சம்பாரிக்கிற பணத்தை வருமான வரித்துறைக்கு கணக்கு காட்டாம ஏமாத்த தானே.

    இருங்கடி இருங்க வரிசையா எலா படமும் ஊத்த போகுது. அண்ணனும் தம்பியும் என்ன ஆகுரீங்கனுனு பாக்கலாம்

  2. StefanoM says

    I noticed that it’s hard to find your site in google, i found it on 20th spot, you should get some quality backlinks to rank it in google and increase traffic. I had the same problem with my blog, your should search in google for – insane google ranking boost – it helped me a lot

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
‘இரண்டாம் உலகம்’ படத்தின் விநியோகஸ்தர் ஆனார் ஆர்யா!

நடிச்ச சம்பளத்தை வாங்கறதுக்குள்ளே, குடிச்ச பாலையெல்லாம் கக்க வச்சுருவானுங்க போலிருக்கே என்று முன்னணி ஹீரோக்களே சில நேரங்களில் புலம்புவதுண்டு. அதற்காக சும்மாவா போக முடியும்? மிச்ச மீதி...

Close