நடிகர் கொலையும் துப்பறியும் போலீசும்…

பெர்னா சினிமாஸ் என்ற பட நிறுவனம் சார்பாக டிட்டு தயாரிக்கும் படத்திற்கு “ அதிரடிவேட்டை “ என்று பெயரிட்டுள்ளனர்.

ஸ்ரீகுமார், ஆர்தன், தினேஷ்பணிக்கர் ஆகியோர் நாயகர்களாக நடிக்க ஷில்பா ரோஷினி நாயகிகளாக நடிக்கிறார்கள். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ஒளிப்பதிவு    –  மோகனன்

இசை    –  சரவணன்

நடனம்    –  ராபின்

திரைக்கதை    –   பாலச்சந்திரன்

எழுதி இயக்குபவர் –  அஸ்வின்குமார்

தயாரிப்பு    –   டிட்டு

படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்…

மக்களின் அமோக செல்வாக்கு பெற்ற நடிகர் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்.அவரது கொலைக்கான காரணம் என்ன என்பது பற்றி மக்கள் பலரும் பலவிதமாக எண்ணிக் கொண்டார்கள்.

அரசாங்கம் அதை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு ஒன்றை நியமிக்கிறது. அவர்கள் விசாரிக்க விசாரிக்க பல பூதங்கள் கிளம்புகிறது. என்ன அது என்பது திகில் கலந்த சுவாரஸ்யமாக திரைக்கதை அமைக்கப் பட்டுள்ளது.

படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கி சென்னை, ஊட்டி, மும்பை போன்ற இடங்களில் ஒரே கட்டத்தில் நடைபெற்று முடிவடைகிறது என்றார்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Trisha Illana Nayanthara Official Teaser | G. V. Prakash Kumar, Anandhi

https://youtu.be/WST5GF8lg-c

Close