நடிகர் சங்கம் ரிவிட் மணிஷா கொய்ட்
ஒரு நடிகைக்கும் இயக்குனருக்கும் சண்டை என்றால், நடிகை பக்கம்தான் நிற்கும் நடிகர் சங்கம். அது நியாயமாகவே இல்லாத பட்சத்திலும் கூட. அதே மாதிரி, இயக்குனர் பக்கம்தான் நிற்கும் இயக்குர் சங்கம். ஆனால் மணிஷா- சீனு ராமசாமி விவகாரத்தில் நடிகர் சங்கம் வைத்த ‘ரிவீட்’, மணிஷாவை ‘கொயட் ’ ஆக்கிவிட்டது. இன்று அவர் கூறியிருக்கும் பதில், ‘என்னது…. இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சிருச்சா?வை விட மோசமானது.
தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்டார் என்று சீனுராமசாமி மீது நேரடியாக குற்றம் சாட்டவில்லை என்றாலும், தனக்கு நெருக்கமான நிருபர்கள் மூலம் அப்படியொரு தகவலை மீடியாவில் வெளியிட்டார் மணிஷா யாதவ். சீனுவும் சின்ன ஆளில்லை. நள்ளிரவில் அவர் கதவை தட்டினாரா, இல்லையா என்பதெல்லாம் இருக்கட்டும். இதை நிரூபிக்க கிளம்பினால் இரு தரப்பும் நாறிப்போகும் என்பதால், நடிகர் சங்கமும், இயக்குனர் சங்கமும், ‘ஏம்ப்பா ஏற்கனவே மீடியாவுல இல்லாததையும் பொல்லாததையும் எழுதுறானுங்க. இதுல நீங்க வேற இப்படி அடிச்சிகிட்டு நின்னா நல்லாவா இருக்கு?’ என்று அட்வைஸ் செய்ய, அப்படியெல்லாம் எதுவும் நடக்கல என்பது போல இன்று விளக்கமளித்துவிட்டார் மணிஷா.
முதலில் என்னை ஒரு கேரக்டர்ல நடிக்க சொன்னார். அப்புறம் அதை வேறொருவருக்கு கொடுத்துட்டு அவர் நடிக்கவிருந்த கேரக்டரில் என்னை நடிக்க சொன்னார். அதோட எனக்கு கொடைக்கானல் குளிர் ஒத்துக்கல. அதனால் நானே அந்த படத்திலிருந்து விலகிட்டேன் என்று கூறியிருக்கிறார் அவர்.
இத்துடன் மணிஷா- சீனு நாடகம் க்ளோஸ். ஸ்கிரீனை மூடுன பிறகும் நாடகம் பார்க்கணும்னு ஆவலா இருக்கிற பொதுமக்கள், வேறொரு ஸ்கிரீன் ஓப்பன் ஆகிற வரைக்கும் காத்திருக்கவும்.
Directors’ Union and Nadigar Sangam sealed Manisha-Seenu episode ‘quietly’!
Manisha Yadav who was unceremoniously removed from Idam Porul Eval, by director Seenu Ramasamy under the pretext that she was not suited for the role, as she was looking sophisticated during the shoot, although he had earlier okayed her during the audition. Manisha on her part officially submitted a complaint to Nadigar Sangam that she was removed without reasons and because of this she lost couple of films and wanted to compensate for the loss. However she did sneaked another story through her media friends that the director was misbehaving with her during the shoot schedule.
Nadigar Sangam and Directors’ Union counselled both of them and suggested a compromise for both of them. Ultimately the episode was buried without a clue. On her part Manisha Yadav said that since she did not like the character that was offered by the director, and since the chill weather did not suit her, she declined the offer and withdrew from the film.
Moral of the story – The Sangams and Unions also do well in ‘cover up’ saga!