‘ நடிச்ச படமெல்லாம் ஹிட்டுண்ணே… ’ கொண்டாட்டத்தில் வருங்கால ஹீரோ
மதுரையின் வைகை தண்ணிக்கு எப்படி ஒரு தனி ருசியோ, அப்படிதான் மதுரை படங்களுக்கும். சுந்தரபாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜகிர்தண்டா, போர் செய்யப் பழகு என்று மதுரை சார்ந்த கதைகளிலேயே நடித்துக் கொண்டிருந்தாலும், அந்த காற்று தருகிற இன்பமே அலாதிதான் என்று மனம் குளிர்கிறார் சௌந்தரராஜா. யாருய்யா இவரு?
யார் இந்த விஜய் சேதுபதி ? யாருய்யா இந்த சிவகார்த்திகேயன் ? என்று கேள்வி கேட்க வைத்தார்களே…. இந்த சௌந்தரராஜாவும் அந்த லிஸ்ட் ஆசாமிதான். ஆனால் அதை அப்பட்டமாக ஒப்புக் கொள்ள இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டும். ஏன்? மேலே நாம் குறிப்பிட்ட படங்களில் எல்லாம் மிக முக்கியமான கேரக்டரில் நடித்த இவரை, இப்போதுதான் ஹீரோ கேரக்டர்கள் துரத்திக் கொண்டிருக்கிறது. ஜெயிக்கலாம்ணே… என்று நம்பிக்கையோடு தோள் குலுக்கும் இவரிடம் கொஞ்சம் பேசினால், பின்னால் வரும் நடிப்பு வண்டிகளுக்கு ஒரு க்ளியர் ரூட் கிடைக்கும்.
“எலக்டரானிக் அண்ட் இன்ஸ்ட்ருமெண்டேசன் என்ஜினியரிங் படிச்சேன். வெளிநாட்டுல வேலை கெடைச்சது. சிங்கப்பூர், லண்டன், துபாய் என வெளிநாட்டு வேலைக்கும் சம்பளத்துக்கும் குறைவில்ல. ஆனா, மனசுக்குள்ள ஏதோ ஒண்ணு குறையிற மாதிரி தோணிச்சு. ஆறேழு வருஷமா வேலை செஞ்சு சம்பாதிச்ச சில லட்சங்களை எடுத்துக்கிட்டு சென்னைக்கு வந்துட்டேன். எனக்குள்ள இருந்த சினிமா கனவு என்னை உசுப்பி விட்டுச்சு. நண்பர்களோட சேர்ந்து ஏகப்பட்ட குறும்படங்களை தயாரிச்சேன். நிறைய விருதுகள் கெடைச்சது. ஒரு பக்கம் குறும்படங்கள்… ஆனா இன்னொரு பக்கம் கம்பெனி கம்பெனியா நடிக்க சான்ஸ் கேட்டு அலைஞ்சேன். அப்டி ஆறு வருஷம் அலைஞ்சதின் பலனா, சுந்தரபாண்டியன்ல வாய்ப்பு கெடைச்சது. சந்தோசமா உணர்ந்தேன். நிறைய பாராட்டுக்கள். ஆனா, மறுபடியும் வாய்ப்பு தேடும் படலம் தொடர்ந்துச்சி.
அப்டி நான் தேடி அலைஞ்சதுல தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்துல வாய்ப்பு கெடைச்சது.
சினிமா, சினிமான்னு வீட்டை பகைச்சிக்கிட்டு, சொந்தக்காரங்களோட திட்டை வாங்கிக்கிட்டு சென்னையில வந்து சான்ஸ் கேட்டு அலையுற எல்லாருக்குமே இப்டி ஒரு சான்ஸ் கிடைக்கிறது இல்ல. அந்த வகையில பாத்தா நான் கொடுத்து வச்சவன் தான். நாலைஞ்சு வருஷமா அலைஞ்சி திரிஞ்சாலும் அறிமுகமான முதல் படமே என்னை அடையாளம் காட்டுற படமா அமைஞ்சது. அதுக்கு முக்கியமா காரணமா இருந்தது, பிரபாகரன் அண்ணனும் சசி அண்ணனுந்தான்.
அவங்க போட்டுக்கொடுத்த ரோட்டுல ஓடிக்கிட்டிருக்கேன். சுந்தரபாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம்னு சூப்பர் ஹிட் படங்களில் நடிக்க வாய்ப்பு கெடைச்சது, எனக்கு கொண்டாட்டமா சந்தோசமா இருக்கு. பொங்கலுக்கு வெளியாக இருக்கிற “ஜிகர்தண்டா”, படமும் கண்டிப்பா பெரிய லெவல்ல ஹிட் ஆகும்.
சுந்தரபாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜிகர்தண்டா இப்டி நான் நடிச்ச 3 படங்களுமே மதுரை பின்னணி கதையாகவே அமைஞ்சது. இப்போ நடிக்கப்போற, “போர் செய்ய பழகு” படமும் மதுரை பின்னணிக் கதைதான்.
கதாநாயகனாக நடிக்க அழைப்புகள் வந்துட்டிருக்கு. கதை கேளுங்கன்னு சொல்றாங்க. எல்லாம் நல்லபடியா அமையிற ஒரு படத்துல விரைவில் ஹீரோவா நடிப்பேன்னு நம்புறேன். அதுவரைக்கும் ஓடிக்கிட்டே இருப்பேன் என்கிறார் சௌந்தரராஜா.
Offers are coming in to play the lead – Soundararaja
Soundararaja, an electronics and instrumentation engineer, was drawing handsome salary working abroad. However he felt his life is not happy and satisfied as his conscience pulled him towards film industry. Resigning his job he came to Chennai and worked on few short films while at the same time looking for opportunities to play some roles in the films. His 6 years of hard work and efforts bear fruition when he got the opportunity to work in Sasikumar’s Subramaniyapuram. However despite getting appreciation for his role in the film, it did not result in getting roles continuously. Again after struggle he got the opportunity to work in Varuthapadatha Valibar Sangam.
“If I am in film industry today, thanks to Prabhakaran sir and Sasikumar sir, they have shown me the road I need to travel. Not many will get an opportunity like me. My first film itself has given me recognition in the industry. Subramaniyapuram, Varuthapadatha Valibar Sangam and Jigirthanda are all Madurai based films. I am confident that Jigarthanda would help him to have a strong footing in the industry. I am getting offers to play the lead in the films. However till everything fall in place I will work hard and establish a name for myself”, says a confident Soundararaja.
All the best raja …sir….