நடிப்பது வேறு தோன்றுவது வேறு இல்லேயா? எடிசன் விருது அறிமுகவிழாவில் ராதாரவி பேச்சு

முறையான தேர்வின் மூலம்– வாக்கெடுப்பின் மூலம் விருதுகள் வழங்கப்படும் போது பெறுபவர்களுக்கும் பெருமை கிடைக்கும். வழங்குபவர்களுக்கும் சிறப்பு சேரும்.

அப்படி ஆன்லைனில் வாசகர்களால்–நேயர்களால் இணையம் மூலம் வாக்களிக்கப்பட்டு தேர்வு செய்யப்பட்டு வழங்கப்படுவதால்தான் எடிசன் விருதுக்கு மரியாதை உள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளாக வழங்கப்பட்டு வரும் எடிசன் விருதுகள் இந்த ஆண்டும் வழங்கப் படவுள்ளன.

விருதுகளைப் பெறப்போகும் நட்சத்திரப் போட்டியாளர்களைத் தேர்ந்தெடுக்கப் போவது பார்வையாளர்கள்தான். எனவே இதில் ஒருபால் சார்புக்கு இடமில்லை.

எடிசன் விருதுகளுக்கான ஆன்லைன் வாக்கெடுப்பு அறிமுகவிழா இன்றுமாலை அம்பிகா எம்பயர் ஹோட்டலில் நடந்தது.

இவ்விழாவில் ராதாரவி கலந்து கொண்டு பேசினார்.
“எடிசன் விருது என்பதில் எடிசன் என்கிற பெயரே நன்றாக இருக்கிறது. சினிமாவைக் கண்டுபிடித்த அவருக்கு செய்கிற மரியாதையாக அவர் பெயரில் வழங்கப் படுவது பாராட்டுக்குரியது.

இந்த விருது விழாவின் ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் சில ஆண்டுகளுக்க முன் டாட்காம் என்கிற இண்டர்நெட் நிருபராக விழாக்களுக்கு வருவார். அப்போது அவரை உள்ளே விட மாட்டார்கள். இன்று எங்குபார்த்தாலும் நெட் வெப்சைட். இன்று எதுவும் பேசமுடியவில்லை எது பேசினாலும் யூடியூபில் வந்த விடுகிறது அப்போதே இதைப்பற்றி யோசித்தவர் செல்வகுமார்.
மலேசியா கவர்னர் இந்த விழாவுக்கு வருகிறார் மலேசிய அரசாங்கம் டத்தோ என்கிற பட்டம் கொடுக்கிறது. இதை தென் இந்தியாவிலேயே எனக்கு மட்டும்தான் கொடுத்து இருக்கிறார்கள். வட இந்தியாவில் ஷாருக்கானுக்குக் கொடுத்து இருக்கிறார்கள்.. ஆனால் இதை சினிமா நூற்றாண்டு விழாவில் யாரும் கண்டு கொள்ளவில்லை. டத்தோ ராதாரவியை யாருக்கும் தெரியவில்லை.

சினிமாவில் எல்லாருமே ஈகோ உச்சியில் இருப்பவர்கள். அவர்களை அழைத்து விருதுவிழா நடத்துவது சிரமம்தான்

எந்த விருது பரிசீலனைப் பட்டியலிலும் என் பெயர் இல்லை. என்னை அழைத்துள்ள செல்வகுமாரின் தணிச்சலைப் பாராட்டுகிறேன்.

ஒரு பத்திரிகையில் உங்களுக்கு விருது தருகிறோம். தேர்ந்தெடுத்து இருக்கிறோம் என்று அழைத்தார்கள். நான் வர முடியாது வீட்டுக்கு அனுப்பி வையுங்கள் என்றேன். ஆளை மாற்றி விட்டார்கள் வேறு ஆளுக்கு கொடுத்துவிட்டார்கள் .உங்கள் விழாவுக்கு யார் வருகிறார்களோ அவர்களுக்குக் கொடுங்கள். வரவில்லை என்றால் ஆளை மாற்றி விடாதீர்கள். தகுதியான ஆட்களுக்குக் கொடுங்கள்.வரவில்லை என்றாலும் வீட்டுக்குப் போய் கொடுங்கள். சிலரைப் போல கலெக்ஷனுக்காகவும் நடத்தக் கூடாது.தேர்வை நீங்கள் செய்வதில்லை என்பதில் மகிழ்ச்சி.வாக்கெடுப்பின் மூலம் விருதுகள் வழங்குவது மகிழ்ச்சி,பாராட்டுக்குரியது.
இடி அமீனாக நடித்த ஒரு அடையாளம் தெரியாத கறுப்பு நடிகனுக்கு ஆஸ்கார் விருது கொடுத்தார்கள். நாலைந்து காட்சிகளில் வந்தாலும் மௌனராகம் கார்த்திக் மாதிரி சிறப்பாக நடித்தால் விருது கொடுக்க வேண்டும்.தோன்றுவது வேறு நடிப்பது வேறு .சமீபத்தில் ஒரு நடிகன் சொன்னான் அந்தப் படத்தில் நடித்திருக்கிறேன் என்று படம் பூராவும் தோன்றினால் அதற்குப் பெயர் நடிப்பா? முதல்ல நடிக்க கத்துக்கப்பா என்றேன்.நடிப்பது வேறு தோன்றுவது வேறு இல்லேயா?

இன்றைக்கு என்ன நடக்குது தெரியுமா? படம் பார்க்கத் தெரியாதவன் பார்த்துட்டு இருக்கிறான். படம்நடிக்கத் தெரியாதவன் நடிச்சுட்டு இருக்கிறான். தமிழே பேசத் தெரியாதவன் நடிச்சுட்டு இருக்கிறான்.

நான் இன்றும் வாய்ப்பு கேட்டு நடித்து வருகிறேன். சொந்தப்படம் எடுத்து கடனாளியானவன் நான்.ஆனாலும் சினிமா என் சுவாசம்.என்றும் நான் சினிமாவை நேசிப்பவன்.

இவ்விருது விழாவுக்கு வாழ்த்துக்கள்” என்று கூறி வாழ்த்தினார்.

விழாவில் நடிகை சஞ்சனா, கதாசிரியர் பிரபாகர், தயாரிப்பாளர் சுரேஷ், பாடகர் வேல்முருகன், நடன இயக்குநர் அஜய், மலேசிய பத்திரிகையாளர் எஸ்.பி. சரவணன், மின்னல் எப் .எம் பொன். கோகிலம், நடிகர் பயில்வான் ரங்கநாதன் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.ஆன்லைன் வாக்கொடுப்பையும் தொடங்கி வைத்தனர்.

வாக்கெடுப்பு பிப்ரவரி 5வரை நடைபெறும். தேர்வானவர்களுக்கு விருது வழங்கும்விழா பிப்ரவரி16 ஞாயிறு மாலை 4மணிக்கு சென்னை லேடி ஆண்டாள் பள்ளி concert hall-ல் நடைபெறும்.

விருது விழாவில் தமிழ்த்திரை நடனக் கலைஞர்கள் மட்டுமல்ல மலேசிய, சிங்கப்பூர், கனடா நாடுகளின் நடனக் கலைஞர்களும் நடனம் ஆடுகிறார்கள்.

தமிழ்த்திரையுலகின் 30 வகை பிரிவுகளுக்கும்
இணையம் மூலம் வாக்களிக்க http://www.edisonawards.in/

 

Appearing in the entire film in whatever role is not acting – Radha Ravi

Edison Awards are in vogue in Kollywood since last six years. The awards are selected by the people by casting their vote for various categories of awards and hence there is no discrimination. This year too the selection of the artistes has been initiated in the event held on 12th Jan. at Ambika Empire, Chennai.

Speaking on the occasion actor Radha Ravi appreciated the apt title given to the awards in commemorating the great scientist wizard Edison by titling the awards. Though he felt sad that he was not part of the 100 years of Centenary Cinema despite the fact having bestowed with multiple awards including recognition from Government of Malaysia, through ‘Datto’ title, for which he was the only recipient in entire south India. He also requested the organizers of the awards that if some actor who has been selected for a particular award, could not attend the award giving event, to hand over the award at his home, instead of replacing the artiste with another artiste.

Recently a young man told him that he had acted in a particular film. I have asked him to first learn how to act whether he comes in the full film or part of 4-5 scenes, giving an example of Karthi in Mouna Ragam. Appearing in the entire film is different from drawing the attention of audience even in one or two scenes with his memorable acting performance. It is the latter which will stand out always at any point of time, he noted.

Actress Sanjana, Story writer Prabhakar, Singer Velmurugan, Dance Choreographer Ajay, Journalists from Malaysia, Saravanan, Minnal MF. Pon. Kokilam, actor Bayilvan Ranganathan and other have participated and spoke in the event.

Later online poll was initiated. The poll closes on 5th Feb. and Awards function will be held on 12th Feb. at Concert Hall of Lady Andal School, Chennai. Malaysian and Indian artistes will enthrall the audience on the occasion.

To cast the vote of your choice for various categories please visit website www.edisonawards.in

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
கேரள நாட்டிளம் பெண்களுடனே ட்ரெய்லர் Kerala Naatilam Pengaludane

http://youtu.be/favQtrKsfLg

Close