நடிப்பாலும், இயக்கத்தாலும் தமிழ் ரசிகர்களை கவர வரும் பாரதிராஜா

இயக்குனர் இமயம் என தமிழ் ரசிகர்களாலும், தமிழ் சினிமா துறையினராலும் செல்லமாக அழைக்கப்படும் இயக்குனர் பாரதிராஜா பல வெற்றி படங்களில் எதார்த்த்தை புகுத்தி நமக்கு அளித்திருக்கிறார்.

பின் வந்த காலங்களில் தான் சிறந்த இயக்குனர் மட்டுமல்ல, சிறந்த நடிகரும் கூட என தன் நடிப்பின் மூலம் நிருபித்துகாட்டினார்.

தற்போது இயக்குனர் இமயம் தன் நடிப்பாலும், இயக்கத்தாலும் தமிழ் ரசிகர்களை கவர உத்வேகமாகிவிட்டார்.

3 புதிய படங்களில் நடிக்கவும், 1 படத்தை இயக்கவும் உள்ளார் பாரதிராஜா.

மனோஜ் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், சலீம் படத்தை இயக்கிய என்.வி.நிர்மல் குமார் இயக்கத்தில், “ஒம்” என்ற படத்திலும், மனோஜ் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் தன் புதல்வன் மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் “சிகப்பு ரோஜாக்கள் 2” என்ற படத்திலும், VLS ராக் சினிமா, வி. சந்திரன் தயாரிப்பில் கிஷோர் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் ஒரு புதிய படத்திலும் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளார்.

மேலும் பாடலாசிரியிர் சிநேகன் நடிப்பில், ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
1 Pandhu 4 Run 1 Wicket – Official Trailer

https://www.youtube.com/watch?v=uuzDtz5uPoI

Close