நண்பனுக்கு ஓரிடம்… நமக்கும் ஓரிடம்… தனுஷுக்கு புரிந்த நிஜம்!

தனுஷ் தயாரித்து நடித்துக் கொண்டிருக்கும் படம் வேலையில்லா பட்டதாரி. இந்த படத்திற்காக அண்மையில் சில கோடிகள் பைனான்ஸ் தேவைப்பட்டதாம். விநியோகஸ்தர்களிடம் புரட்டிக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் போன் போட்டவருக்கு வந்ததே வெறுப்பு… பணம் இல்லை என்று அவர்கள் சொல்லியிருந்தால் கூட ஓ.கே. அவர்கள் சொன்ன பதிலே வேறு. ‘சார்… நீங்க தயாரிச்சு சிவகார்த்திகேயன் நடிக்கிற ‘டாணா’ படத்துக்கு வேணும்னா எத்தனை கோடி வேணும்னாலும் தர்றோம். பட்… வேலையில்லா பட்டதாரிக்கு எங்களால் பணம் தர முடியாது என்றார்களாம்.

தமிழ்சினிமாவில் தன்னோட இடம் எங்கேயிருக்கு என்பதை சற்று தாமதமாக புரிந்து கொண்ட தனுஷ், இருந்தாலும் தன் நண்பன் நல்ல இடத்தில் இருக்காரே என்று சந்தோஷப்பட்டதோடு உடனடியாக ஒரு காரியமும் செய்திருக்கிறார்.

வேலையில்லா பட்டதாரி படத்தில் ஒரு பாடலை செருகப் போகிறாராம். அதில் சிவகார்த்திகேயன் கெஸ்ட் அப்பியரன்ஸ் கொடுத்து ஆடப் போகிறார். தேவைக்கு பணம் புரட்டுன மாதிரியும் ஆச்சு. ஃபிரண்ட்ஷிப்புக்கு மரியாதை கொடுத்த மாதிரியும் ஆச்சு.

வளையாத திமிரையும் வளைய வைக்குதே சுச்சுகேசன்…!

Dhanush’s embarrassing moment!

Dhanush faced some financial shortcomings for his film Velai Illa Pattathari, which he is also producing, contacted the financiers for short term arrangement. There is nothing unusual in it. But the response he received from the other side was shocking and dismayed him. The financiers seems to have told him that they can fund any amount for the film he is producing with Siva Karthikeyan’s film Taana, but regretted that they could not help for his Velai Illa Pattathari.

On one side he is happy for his friend’s stature has improved, while on the other side, he felt embarrassed at his own position in the industry. Understanding which way the wind is blowing he immediately included a song in his film in which he requested his friend Siva Karthikeyan to shake the legs.

Not only was his financial problem resolved while at the same time he has given the respect for ‘friendship’ which matters more.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
வைரமுத்துவுக்கு பிறகுதான் வாலியாம்… கோச்சடையானின் குரூர பார்வை!

‘அவ்ளோ பெரிய சூப்பர் ஸ்டாரையே மேடையில கூட்டத்தோட கூட்டமா நிக்க வச்சுட்டாங்களேப்பா...’ இந்திய சினிமாவின் 100 வது ஆண்டு விழாவில் ரஜினிக்கு இழைக்கப்பட்ட அவமானத்தை தன்னுடைய அவமானமாக...

Close