“நண்பர்கள் நற்பணி மன்றம்”
ஸ்ரீ அண்ணாமலையார் மூவீஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படம் “நண்பர்கள் நற்பணி மன்றம்” ஜெய்நாத் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
கதாநாயகியாக அக்ஷயா நடிக்கிறார். மற்றும் கே.பிரபாகரன், ஆடுகளம் நரேன், இமான்அண்ணாச்சி, ராதா, சிங்கம் புலி, ரவிமரியா, மகேந்திரன், சார்மிளா, கூல்சுரேஷ், நான்கடவுள்ராஜேந்திரன் பாரதிகண்ணன், நெல்லைசிவா, பாவாலட்சுமணன், முத்துக்காளை ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – செல்வா.ஆர்.எஸ்
நா.முத்துகுமார், யுகபாரதி, ரவிபாரதி பாடல்களுக்கு ஸ்ரீகாந்த்தேவா இசையமைக்கிறார்.
கலை – பத்மநாபகதிர் / எடிட்டிங் – லான்சிமோகன்
தயாரிப்பு நிர்வாகம் – ரஜித், பழனியப்பன் / நடனம் – சஞ்சீவ்கண்ணா,
ஸ்டன்ட் – மிரட்டல்செல்வா
தயாரிப்பு மேற்பார்வை – ஆனந்தகண்ணன்
தயாரிப்பு – C.மாதையன்
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ராதாபாரதி.
படம் பற்றி இயக்குனர் ராதாபாரதியிடம் கேட்டோம்…..
காமெடி கலந்த காதல் கதை தான் நண்பர்கள் நற்பணி மன்றம். இப்படத்திற்காக சமீபத்தில் திருக்கோடியூர் என்ற கிராமத்தில் கோயில் திருவிழா பாடல் காட்சி எடுக்கப்பட்டது.
கட்டழகி – சின்ன
பொட்டழகி – உன்ன
பார்த்தாலே – பலம் கூடும்டி “
என்ற பாடல் காட்சிக்காக மும்பையிலிருந்து வைபவி என்ற நடிகையை ஒப்பந்தம் செய்தோம். எனக்கு ஈடுகொடுத்து ஆடக் கூடிய நடிகருடன் தான் நடிப்பேன் என்று சொன்னார் வைபவி. படப்பிடிப்புக்கு வந்த அவர் ஜெய்நாத்துடன் ஆடி முடித்த பிறகு நானே எதிர்பார்க்க வில்லை சூப்பராக ஆடி இருக்கே என்று பாராட்டினார்.
அத்துடன் இந்த பாடல்காட்சி இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த்தேவா தலைமையில் நடப்பது போன்று படமாக்கப்பட்டுள்ளது. ஸ்ரீகாந்த்தேவாவும் இந்த குத்துப்பாட்டுக்கு நடனமாடி இருக்கிறார் என்று கூறினார் இயக்குனர் ராதாபாரதி.