நன்றி மறவாத நடிகர் திலகத்தின் குடும்பம்….

நேஷனல் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பின் படமான பராசக்தி மூலம் சிவாஜி கணேசனை திரையுலகுக்கு அறிமுகம் செய்தவர் பெருமாள் முதலியார். வேலூர் நேஷனல் திரையரங்கின் உரிமையாளரான இவரது வீட்டுக்கு ஆண்டுதோறும் பொங்கல் திருநாளில் சிவாஜி கணேசன், அவரது மனைவி கமலா மற்றும் குழந்தைகளுடன் வந்து சீர்வரிசை அளித்து ஆசி பெற்று செல்வது வழக்கம்.

சிவாஜி கணேசன் மறைவை அடுத்து அவரது மகன்கள் ராம்குமார், பிரபு ஆகியோர் தங்கள் குடும்பத்துடன் வேலூருக்கு பொங்கல் அன்று வந்து சீர்வரிசை அளித்து ஆசி பெற்று செல்கின்றனர். இந்த ஆண்டு பொங்கலையொட்டி, நடிகர் பிரபு, அவரது மனைவி புனிதா, நடிகர் விக்ரம் பிரபு ஆகியோர் காட்பாடி காந்திநகர் கிழக்கு பகுதியில் உள்ள பெருமாள் முதலியார் வீட்டுக்கு வந்தனர். அவர்களை பெருமாள் முதலியார் மனைவி மீனாட்சியம்மாள் மற்றும் குடும்பத்தினர் வரவேற்றனர்.

பிரபு குடும்பத்தினர் அளித்த சீர்வரிசையை பெற்றுகொண்ட மீனாட்சியம்மாள் அவர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கி ஆசி அளித்தார். அவர்கள் வீட்டில் சிறிது நேரம் தங்கி காலை சிற்றுண்டி சாப்பிட்டு விட்டு பிரபு குடும்பத்தினர் புறப்பட்டு சென்றனர். நடிகர் சிவாஜி, பெருமாள் முதலியார் இருவரும் இவர்களை விட்டு பிரிந்து சென்ற பின்னரும் இரு குடும்பத்தினரின் நட்பும் இன்று வரை தொடர்ந்து நீடித்து வருவது நட்பின் அடையாளத்தை காட்டுகிறது.

இந்த முன்னுதாரணத்தை திரையுலகத்தில் இருக்கிற எல்லாரும் பின்பற்றினால் நாட்டில் கொஞ்சமாவது மழை பெய்யும். அட்லீஸ்ட் கோடம்பாக்கம் வடபழனி ஏரியாவில் மட்டுமாவது….

Gen-Next of Nadigar Thilagam family sincere in following his ideals!

National Pictures owned by Perumal Mudhaliar introduced Sivaji Ganesan to the film world. Since then it was no turning back for Sivaji till his death. To show his gratitude and friendship, Sivaji and his wife Kamala along with his children, used to visit Perumal Mudhaliar at Vellore every year for Pongal and gave him presents and spent some time with Mudaliar’s family.

After the demise of Sivaji’s death, Prabhu and his elder brother Ramkumar follow this procedure religiously till date. For this Pongal, Prabhu along with his wife and children, visited Perumal Mudaliar’s home at Vellore. Mudaliar’s wife (Perumal Mudaliar is no more). She received the guests and received the gifts Prabhu and family gave her. She also presented gifts to Prabhu and family who had break-fast in their home.

It is heartening to note that despite the two heads of the families are no more, the children and the current generation is following the tradition with scrupulous sincerity.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சூர்யாவின் ‘அஞ்சான் ’ புத்தம் புதிய புகைப்படங்கள்

[nggallery id=111]

Close