நமக்கெல்லாம் கோட்டு சரிபட்டு வராதுங்க… வெட்கப்பட்ட விதார்த்!
ஆமிர் என்ற இந்திப்படத்தைதான் ஆள் என்று தமிழில் ரீமேக் செய்கிறார்கள். பல படங்களில் தோல்வி கண்டு, ஒரு வெற்றிக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் விதார்த் ஹீரோவாக நடிக்கிறார். ஆச்சர்யம் என்னவென்றால் சிட்டி கதைகளுக்கு சற்றும் பொருந்த மாட்டோம் என்று அவரே நினைத்திருந்த நேரத்தில், கோட் சூட் போட்டுக் கொண்டிருக்கும் ஒருவராக நடித்திருக்கிறாராம் இதில். இந்த கோட் வேணுமாங்க என்றுதான் முதலில் கேட்டேன். இல்ல… இருக்கட்டும் என்று கூறிவிட்டார்கள். ஆனால் இந்த படத்தில் நான் அணிந்திருக்கிற கோட்டுக்கும் ஒரு ரோல் இருக்கிறது என்றார் விதார்த்.
ஆமிர் கதை என்ன? சாதாரண செருப்பு தொழிலாளியின் மகன், அப்பாவின் கஷ்டம் சகிக்காமல் வெளிநாட்டுக்கு போகிறான். போகிற இடத்தில் கைநிறைய சம்பாதித்து ஊரிலிருக்கும் குடும்பத்தை வசதியாக வாழ வைக்கிறான். சொந்த வீடு, நிம்மதியான வாழ்க்கை என்று போய் கொண்டிருக்கும் போது நாடு திரும்புகிறான். ஏர்போர்ட்டில் இறங்கியுவுடன் அவனை கடத்துகிறது ஒரு கும்பல். குடும்பத்தையே தன் கஸ்டடிக்குள் வைத்துக் கொண்டு இவன் கையில் வெடிகுண்டு நிரம்பிய சூட்கேசை கொடுத்து ஆங்காங்கே வைக்க சொல்கிறது. ஒரு அரசியல் தலைவரையும் கொல்ல ஏவுகிறது. அதையெல்லாம் அவன் செய்தானா? அரசியல்வாதியை கொன்றானா? முடிவில் அவன் என்ன ஆனான்? விறுவிறுப்பான அந்த படம் பெரிய ஹிட்.
இந்த படத்தை டி.வி.டியில் பார்த்த விதார்த் ஆடிப்போனாராம். இவ்வளவு பெரிய கதைக்கு நான் தாங்குவேனா என்கிற அளவுக்கு யோசித்தாராம். எப்படியோ? படம் முடிவடைந்துவிட்டது. நல்ல படங்களை வாங்கி வெளியிடும் ஜே.எஸ்.கே நிறுவனம்தான் இந்த படத்தையும் வாங்கி வெளியிடுகிறது.
இந்த படமாவது விதார்த்தின் மார்க்கெட்டை உயர்த்துமா?
Vidharth to portray urbanised look in Aal!
Vidharth who hitherto was acting in rustic roles will have a makeover in Aal, in which he plays the lead as an urban character. Initially he was hesitant to accept the role, but was convinced he could pull it off.
The film is about a young son of suffering cobbler family, goes abroad and changes the financial position of his family completely. On his return to be with his family, he was kidnapped by a gang who wanted to place bombs in the city and also plan to kill a political leader. How he faces the challenges and comes out of it is the crux of the story.
Vidharth felt the role was heavy but since he needed a break he went ahead to don the role. The film is a remake of Hindi hit film Ameer, is distributed by JSK Corporation.