“நமீதாவையா கிண்டல் பண்றே…” -நடிகரை எச்சரித்த குஷ்பு
நமீதா எங்கிருக்கிறாரோ, அங்கு கலகலப்புக்கு பஞ்சமேயிருக்காது. கலகலப்பை அவர் ஏற்படுத்தினாலும் சரி, அவரை முன்னிறுத்தி ஏற்பட்டாலும் சரி, சம்பந்தப்பட்ட இடத்தில் ‘கெக்கேபிக்கே’ நிச்சயம். அப்படிதான் ‘விழா’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவிலும் நடந்தது.
மானாட மயிலாட, நாளைய இயக்குனர் போன்ற வெற்றிக்கரமான நிகழ்ச்சிகளின் தயாரிப்பாளரான ஜெயவேல் தயாரித்திருக்கும் படம்தான் இது. எப்போதுமே மணிக்கட்டை மறைக்கும் பிரேஸ்லெட், சட்டை காலருக்கு நிகரான தங்க சங்கிலி என நடமாடும் நகைக்கடையாகவே காட்சியளிப்பார் ஜெ.வி. அந்த மேடையிலும் அவர் அங்கும் இங்கும் நடமாடிக் கொண்டிக்க, மைக்கை பிடித்த நமீதா பேசியதுதான் சிரிப்ஸ் வெடி. ‘நான் மானாட மயிலாட நிகழ்ச்சியில கலந்துக்க தைரியமா போவேன். ஏன்னா சப்போஸ் சம்பளம் சரியா வரலேன்னாலும் ஜெயவேல் சாரை கடத்திட்டு போனா போதும். அவ்ளோ கோல்டு போட்டுருக்காரு அவரு’ என்றார் தனது ஜுனுன் தமிழில்.
இவர் ஜெயவேலை தாக்கியது இப்படியென்றால், அவ்ளோ பிரமாண்டமான நமீதாவையே போட்டு தாக்கிவிட்டார் நகைச்சுவை நடிகர் ஜெகன். நான் இங்க நிகழ்ச்சி நடக்கிற இடத்துக்கு கொஞ்சம் முன்னாடியே வந்துட்டேன். உள்ளே எட்டிப்பார்த்தா ஒரே கூட்டம். ஒருவளை நமீதாதான் இருக்காங்க போலிருக்குன்னு திரும்பி போயிட்டேன் என்றார். அதாவது நமீதாவே ஒரு பெருங்கூட்டத்துக்கு ஒப்பானவர் என்பதுதான் அவரது நக்கல். இதை நன்றாக புரிந்து கொண்ட குஷ்பு, (ஆமா, அவரும் வந்திருந்தாருல்ல…) ‘ஜெகன்… எங்க நமீதாவையா கிண்டல் பண்றே. இரு பிறகு கவனிச்சுக்குறேன்’ என்றார் கிண்டலாக.
If I kidnap Jayavel, I can get salary out of his jewels – Namitha
Vizha audio launch was held today to which Namitha, Kushbu amongst other guests participated. Vizha is a film directed by winner of Nalaya Iyakkunar Balakumaran and produced by Jayavel, who also produces Nalaya Iyakkunar and Manada Mayilada for Kalignar TV. Jayavel wearing gold jewels around his next and wrist is a common sight. Namitha while speaking in the event made fun of that, saying, that I don’t fear for not getting salary for the reality shows Jayavel sir is producing, because, if I kidnap him, I will get my salary out of the gold ornaments he wore. Jayavel though a bit embarrassed, took her swipe with good spirit. Comedian Jagan who spoke next, made fun of Namitha, indirectly pointing out her size, to which Kushbu took a swipe at Jagan, saying how he could say that on Namitha and made a casual threat. The event was such a fun with those from the TV channel programme.