நமீதா சீக்கிரம் அரசியலில் சேரட்டும்… ‘சின்ன நமீதா’ நித்யா அவசரம்!

‘அடுத்த சூப்பர் ஸ்டார் நான்தான்’ என்று சொல்லிக் கொண்டு அவரது நாற்காலியை பிடுங்கிவிடுகிற ஆர்வத்தோடு போயஸ் கார்டன் பக்கமாகவே சுற்றி வருகிறார்கள் சில ஹீரோக்கள். அவர்கள் பிரச்சனை அது என்றால், ‘நமீதா இடம் நமக்குதான்’ என்று கொஞ்ச நாட்களாக நமீதா இடத்துக்கு ரூட் போட்டுக் கொண்டிருக்கிறார் ஒரு நடிகை. அவர் பெயர் நித்யா. ‘நான்தான் சின்ன நமீதா’ என்றும் கூறிக் கொள்ளும் இவர், தற்போது திமிர திமிர கவர்ச்சி காட்டி வரும் படம் ‘சாய்ந்தாடு சாய்ந்தாடு’.

மூக்கு, முகவெட்டு உள்ளிட்ட முக்கியமான ஏரியாக்களில் கூட நமீதாவை ஞாபகப்படுத்தி வரும் இவர் நமீதாவின் இடத்தை பிடிக்க ஆர்வம் காட்டுவதில் தப்பில்லைதான். ஆனால்?

‘நமீதா… சீக்கிரம் இடத்தை காலி பண்ணுங்க’ என்று சத்யாகிரஹம் பண்ணுகிற அளவுக்கு இவர் தொடர்ந்து பேசி வருவதுதான் ‘தாங்க முடியல’ பாணியாக இருக்கிறது. ‘சாய்ந்தாடு சாய்ந்தாடு’ படப்பிடிப்புக்காக புதுக்கோட்டையில் இருந்த இந்த சின்ன நமீதா நித்யாவிடம் ஏரியா நிருபர் ஒருவர் பேட்டிக்காக வந்திருந்தார். அவரது கேள்விகளுக்கு தாறுமாறாக பதில் சொல்லி வந்த நித்யா, ஒரு கட்டத்தில் ‘நமீதா இடத்தை காலி பண்ண வேண்டிய நேரம் வந்தாச்சு. அதான் அவரை அரசியலில் சேர்வதற்காக கூப்பிடுறாங்களே, போக வேண்டியதுதானே?’ என்றெல்லாம் பதில் சொல்ல ஆரம்பித்துவிட்டார். வந்திருந்த நிருபருக்கே அதிர்ச்சி. ‘இப்படியெல்லாம் பட்டவர்த்தனமா பேசுறீங்களே? நமீதா கோபிக்க மாட்டாரா?’ என்று கேள்வி எழுப்பினார்.

என்னை ஒருமுறை நேர்ல பார்த்தா அவருக்கு அந்த சந்தேகமே வராது. கோபிக்கவும் மாட்டார். நானும் அவரை சந்திக்கணும்னுதான் வெயிட் பண்றேன் என்றார் நித்யா.

யாராவது யாருடைய இடத்துக்காகவாது சண்டை போடுவதே கோடம்பாக்கத்தின் சாபக்கேடு ஆகிவிட்டது. ஆனால் இந்த போட்டியை பார்த்தால், இருவரில் கீழே யார் விழுந்து புரண்டாலும் ரசிகர்களுக்குதான் கொண்டாட்டம்.

சீக்கிரம் சண்டைய ஆரம்பிங்க நடிகைகளே….

Nithya intensifies her efforts by staking to Namitha’s role?

It happens so much explicitly in Kollywood that even one is still making efforts to thrive on in Kollywood, other artistes somehow wanted to grab their position, without even thinking what would happen to them tomorrow if they were pushed to same situation. This is what exactly is happening now between Namitha and Nithya. Nithya who is debuting in Sayinthadu Sayinthadu exhibiting her glam, is bent upon seizing the place of Namitha in Kollywood. During the shoot of the film when a reporter interviewed her she responded quite bluntly saying that when Namitha is being approached to join political party why is she not joining them, questioned Nithya. When the reporter suggested if she is not hurting Namitha by such answers, she reportedly told the reporter, “Once Namitha saw her she would not get angry with her. I am also waiting to see her in person”.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
மீண்டும் வருகிறார் மிஷ்கின்

சினிமா எந்த குப்பையில் வேண்டுமானாலும் புரளட்டும்... அதை நான் பன்னீர் பாட்டிலில்தான் குளிப்பாட்டுவேன் என்று அடம் பிடித்துக் கொண்டிருக்கிறார் மிஷ்கின். அவரது இயக்கத்தில் சில படங்கள் ஆஹா...

Close