நமீதா ரிட்டர்ன்…. அடிச்சுக் கிளப்பப் போகும் எங்க மருது!

ஏலே ஏலே மருது… இது எந்த ஊரு கதிரு… என்று வைரமுத்து எழுதினாலும் எழுதினார். பாண்டிய நாடு படத்தில் வரும் அந்த பாடல்தான் இப்போது டாப் டென்னில் பட்டைய கிளப்பிக் கொண்டிருக்கிறது. இப்போது இன்னொரு மருதுவையும் தயார் படுத்திக் கொண்டிருக்கிறார்கள் கோடம்பாக்கத்தில். இது பாட்டு அல்ல, படம்.

கலாபவன் மணியும் நமீதாவும் இணைந்து நடிக்கும் புதிய படம் ‘எங்க மருது’. மதுரையை பின்னணியாக கொண்ட இந்த படத்தில் காதல் ஆக்ஷன் காமெடி என்று கலந்து கட்டி அடித்திருப்பதாக கூறுகிறார் படத்தின் இயக்குனர் ஆர்.முருகேசன். இவருடன் சீத்தாபதியும் இந்த படத்தை இணைந்து இயக்கியிருக்கிறாராம். படத்தில் ஆசிஷ்வித்யார்த்தி, மயில்சாமி, சீதா, சிங்கமுத்து ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். ஜான் பீட்டர் இசையமைக்கிறார். விரும்பி வந்தால் விலகிப் போகும். விலகிப் போனால் விரும்பி வரும். இதுதான் எங்க படத்தோட கான்சப்ட் என்று கூறிய முருகேசனிடம், ‘நமீதாவை பற்றி சொல்லுங்க’ என்றதுதான் தாமதம். படபடவென பேச ஆரம்பித்தார்.

நமீதாவுக்கு இருக்கிற கிரேஸ் பற்றி நான் சொல்லவே வேண்டாம். அவங்க எங்க போனாலும் கூட்டம் திரண்டு வந்துருது. அந்தளவுக்கு மக்களுக்கு பிடித்த நடிகையா அவங்க இருக்காங்க. கவர்ச்சி அவங்க கூடவே பிறந்தது. ரசிகர்களின் ஆசையும் ஏக்கமும் வீணா போயிடக் கூடாதுன்னு அவங்களுக்கு ஒரு குளியல் காட்சியும் இருக்கு என்று கூறி நமீதாவின் குளியல் ஸ்டில்களை அப்படியே கொடுத்தார். ‘நீச்சல் குளமே சூடாகிற அளவுக்கு குளித்து கும்மாளமடித்தாலும், இந்த படத்தில் நடிக்க நிறையவே ஹோப் இருந்துச்சு. ஒரு நல்ல நடிகை என்று என்னை போற்றவும் பாராட்டவும் இந்த படம் ஹெல்ப் பண்ணும்’ என்று இயக்குனரை பாராட்டினாராம் நமீதா.

அப்படியே அவர் சொன்ன இன்னொரு விஷயத்தையும் கவனிக்கணும். ‘இந்த படத்தில் கலாபவன் மணி சாரோட நடிச்சிருக்கேன். அவர் பயங்கரமான மிமிக்ரி கலைஞர்னு பலருக்கும் தெரியும். நான் ஷுட்டிங் ஸ்பாட்ல நேர்ல பார்த்து பிரமிச்சுட்டேன். எந்நேரமும் எல்லாரையும் சிரிக்க வைப்பதில் அவருக்கு நிகர் அவர்தான்’ என்றார் நமீதா.

நமீதாவே பாராட்டிய பிறகு கலாபவன்மணிக்கு ‘கலைமாமணி விருது’ கொடுக்கலேன்னா எப்படி? நமீதா சார்பில் அரசுக்கு ஒரு அப்ளிக்கேஷன் ப்ளீஸ்….!

Namitha playing the lead with Kalabhavan Mani

Glamour queen Namitha’s fans will be glad as their dream girl will be playing the lead with Kalabhavan Mani in Madurai based film titled Enga Marudhu, directed by R. Murugesan jointly with Seethapathi. Speaking about the film, Murugesan has said that knowing Namitha’s popularity with her fans, he has included a ‘swimming pool’ scene in the film. He hastened to add that there are plenty of scenes where Namitha show-cased her acting skills too in the film. Namitha herself had expressed happiness saying that this will film help her to be recognised as an able actress, the director revealed. She also praised Kalabhavan Mani for his mimicry skills and she enjoyed his talents in the sets, she seems to have told the director. Ashish Vidhyarthi, Mayilsamy, Seetha and Singamuthu also play important roles in the film.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
வேதாளம், தூங்காவனம், ருத்ரம்மாதேவி படங்கள் எந்தெந்த தியேட்டர்களில்? (06-11-15)

 

Close