நமீதா விசிட்… -கோக்குமாக்காகி போனது குமரி மாவட்டம்!
‘என் கருத்துக்கு மதிப்பளிக்கும் கட்சி எது என்பதை கண்டறிந்து அதில் சேர்வதாக இருக்கிறேன்’. இப்படி சொன்னவர் யாரோ ஒரு ‘கருத்து கந்தசாமி’யல்ல, ‘கவர்ச்சி கன்னிசாமி’யான நமீதாவேதான்.
நமீதா திறந்து வைத்த கடையெல்லாம் யாவாரத்தில் ஏகபோகமாக இருப்பதால், ‘எங்க கடைக்கு வாங்க… உங்க கடைக்கு வாங்க’ என்று நடிக்கவே விடாமல் (?) அவரை தொந்தரவு செய்து கொண்டிருக்கிறது ஒரு கூட்டம். அப்படியொரு கூட்டத்தின் அவசரம் கருதிதான் குமரிமுனை வரைக்கும் போய் ஒரு கடையை அவசரம் அவசரமாக திறந்து வைத்திருக்கிறார் நமீதா. அவர் வருகிறார் என்றதும் சுற்றுப்பட்டு கிராமங்களில் இருந்தெல்லாம் ரசிகர்கள் திரண்டு வந்து கூச்சலிட, அத்தனை பேருக்கும் அருள்பாலித்தார் நமீதா.
அதற்கப்புறம் பிரஸ்மீட். அங்கு கேட்கப்பட்ட கேள்விகளில் ஒன்றுதான் இந்த அரசியல் கேள்வி. நரேந்திர மோடி பிறந்த குஜராத்லதான் நானும் பிறந்தேன். இந்த ஒரு காரணத்திற்காகவே நீங்க பி.ஜே.பி யில் சேரப் போறீங்களான்னு கேட்கிறாங்க. நான் இன்னும் முடிவு எடுக்கல. என் கருத்துக்கும் மதிப்பளிக்கும் கட்சி எது என்பதை ஆராய்ந்து அதில் சேரலாம்னு இருக்கேன். பட்… மக்களுக்கு சேவை செய்யறதுதான் என்னோட நோக்கம் என்றார் நமீதா.
நமீதாவின் குமரி மாவட்ட மச்சான்ஸ் எல்லாரும் ஒன்று கூடி ஒரு புயல்வேக தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறார்களாம். எல்லாம் நமீதாவின் குமரி மாவட்ட பாசத்தை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட தீர்மானம்தான் அது. அப்படியா…. என்னங்க அது? இதே குமரியில அய்யன் வள்ளுவன் சிலையை விட பெரிய சிலையை நமீதாவுக்கும் நிறுவனும் என்றுதான்!
I will join a political party which gives credence to my views – Namitha
Namitha is not quite popular in films and dance reality shows, but she is equally popular in opening shops in Tamil Nadu as well, perhaps, the sentiments attached to her – shops do good business that were opened by Namitha. We don’t know how far it is true, but the mob that gathered recently in Kanyakumari to see Namitha is a case point. Namitha visited Kumari district to open a retail show room there, a there was uncontrollable mob gathered to see her. After the rituals of the opening ceremony she met the press. To one of the questions whether she would join BJP since Narendra Modi is from her native place, she answered that whichever party gives credence to her views, I will join that party. “My only objective is to serve the people”, added Namitha. Now we may see political parties vying to get Namitha enrolled with them!