நம்ப வைத்து கழுத்தறுத்த ஜீவா
‘என்றென்றும் புன்னகை’ படப்பிடிப்பு நேரத்திலேயே இந்த படம் ஓடலேன்னா நான் உன்னோட கார் டிரைவரா சேர்ந்துடுறேன் என்று சந்தானத்திடம் காமெடி பண்ணியவர் ஜீவா. அந்தளவுக்கு தான் நடிக்கும் படத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்பவர் அவர். எப்படியோ? அந்த படம் ஹிட்டாகி ஜீவாவின் மரியாதையில் மேலும் ஒரு கம்பீர சிறகை செருகி வைத்தது. நடிக்கும் போது அப்படத்தின் டைரக்டருக்கு மன உளைச்ச தந்த அதே ஜீவாவே, அகமது… எப்ப இன்னொரு கதையை சொல்றீங்க? என்று கேட்கிற அளவுக்கு போயிருக்கிறது நிலைமை. இருவரும் மீண்டும் இணைந்து படத்தை தரப் போகிறார்களாம்.
போகட்டும்… நாம் சொல்ல வந்தது வேறு கதை. ‘வல்லினம்’ படம் தயாராகிக் கொண்டிருக்கும் போதே ஜீவாவை சந்தித்து ஒரு கதை சொல்லியிருந்தாராம் அப்படத்தின் இயக்குனர் அறிவழகன். கதையை கேட்ட ஜீவா, கண்டிப்பா நாம சேர்ந்து இந்த படத்தை பண்றோம் என்றும் கூறியிருந்தாராம். வல்லினம் வெளியாகி, பெரிய வெற்றியை எட்டவில்லை என்றாலும், டுபாக்கூர் படமில்லை என்கிற அளவுக்கு கலெக்ஷன் வந்திருக்கிறது. இத்தனைக்கும் அந்த படத்திற்கான விமர்சனம் பரவலாகவே குட் அந்தஸ்தில்தான் இருந்தது.
ஜீவா கொடுத்த நம்பிக்கையில் மீண்டும் அவரை சந்தித்தாராம் அறிவழகன். உங்களுக்கு இப்போ கால்ஷீட் தர முடியாது. நடுவுல வேற ஹீரோ யாரையாவது வச்சு ஒரு படம் பண்ணிட்டு வாங்க. பிறகு பார்க்கலாம் என்று கூறிவிட்டாராம் ஜீவா. இதை முன்னாடியே சொல்லியிருந்தா இந்நேரம் வேற ஹீரோவோடு ஷுட்டிங் போயிருக்கலாம். கடைசி நேரத்துல வந்து சொல்றாரே என்று கவலைப்படுகிறாராம் அறிவழகன்.
ஓடுற குதிரைக்கு நொண்டுற குதிரை மேல அலட்சியம். நொண்டுற குதிரைக்கு படுத்திருக்கிற குதிரை மேல அலட்சியம்.