நயன்தாராகிட்ட கத்துக்கங்க… நல்லவங்களே!

உங்களோட போன படம் சரியா போகல. சம்பளத்தை குறைச்சுக்க முடியுமா என்று தயாரிப்பாளரே தயங்கி தயங்கி கேட்பது ஒரு வகை. கேட்காமலே சம்பளத்தை குறைத்துக் கொள்வது இன்னொரு வகை. இதில் செகன்ட் ஏரியாவில் நின்று அடிக்கிறார் நயன்தாரா. வயசு ஏற ஏற அழகையும், அதற்கேற்ப சம்பளத்தையும் ஏற்றிக் கொண்டிருக்கிற ஒரே நடிகை நயன்தாராதான். இன்றைய தேதிக்கு அவர் இரண்டரை கோடி ரூபாய் கேட்டால் கூட, அதுல ஒயிட் எவ்ளோ? பிளாக் எவ்ளோம்மா என்று கேட்டு கேட்டு கடமையாற்ற ஏராளமான படாதிபதிகள் இங்கே இருக்கிறார்கள்.

இதையெல்லாம் சட்டை பண்ணாமல் தனது மனசாட்சிக்கு ஏற்ப அவர் நடந்து கொண்டிருப்பதாக புளகாங்கிதப்படுகிறார்கள் இங்கே. எப்படி? ஏன்?

வேறொன்றுமில்லை… அவர் நடித்து லேட்டஸ்ட்டாக வெளிவந்த இது கதிர்வேலன் காதல், நினைத்தளவுக்கு ரீச் ஆகவில்லை என்கிற வருத்தம் வந்திருக்கிறதாம் நயன்தாராவுக்கு. தனது அடுத்த படத்திலும் உதயநிதிக்கு ஜோடியாக நடிக்கவிருக்கும் நயன்தாரா, தனக்கு பேசப்பட்ட சம்பளத்திலிருந்து பெரும் தொகையை தானே முன் வந்து குறைத்துக் கொண்டாராம். இந்த பெருந்தன்மைதான் அவரை வானாளாவிய உயரத்துக்கு வளர வைச்சுருக்கு என்று மேலும் புகழாஞ்சலி போஸ்டர் ஒட்டிக் கொண்டிருக்கிறது சில கோஷ்டிகள்.

ஓணான் போற சந்துல ஒட்டகத்தை ஓட்டிட்டு போகணும்னு நினைக்கிற எல்லா நடிகர் நடிகைகளுக்கும் நயன்தாரா பாலிஸிதான் பாடம் பக்குவம் எல்லாமும்!

Nayanthara opts to reduce her salary for Nanbenda?

Well, you may not believe it. But it appears to be a fact. Nayanthara is one actress who will always be in the news for all right reasons. And her time is so good that whatever she touches turns gold. All her films were doing well at the box office. And her Nee Enge En Anbe is looking to take her to the next higher level. There are lot of production houses who are ready to offer maximum salary to her for her call sheet. Then why she opts for a reduction in salary?

She learnt that her latest offering Idhu Kathirvelan Kadhal did not get the desired results at the Box Office, though it has scraped through the break-even, and may settle in the ‘hit’ club. Since there will be a decline in the profit for the producer, she voluntarily opted to reduce her salary for her next film Nanbenda which she is currently doing. The unit members were speaking very high of her ethical standards and her courage to reduce her salary by herself.

When heroes and heroines are chasing each other to raise their remuneration, here is one actress who stands alone. That is one of the reasons perhaps she still reigns southern film industry.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
லொள்ளுசபா பாலாஜி காலமானார்

உடல்நலக் கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த காமெடி நடிகர் பாலாஜி இன்று காலை திடீர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 43. தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘லொள்ளு...

Close