நயன்தாராவுக்கு ஒரு நீதி, ஸ்ரேயாவுக்கு ஒரு நீதியா?
பல்லிக்கு ஒரு நீதி, பாம்புக்கு ஒரு நீதியா என்கிற புலம்பல் சப்தம் கேட்கிறது நடிகைகள் மத்தியில். இந்திய சினிமாவின் 100 வது ஆண்டுவிழாவில் மேடையில் நடனமாட முன்னணி நடிகைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. (இன்னும் எத்தனை மாசத்துக்குதான் இந்த விழா செய்தியை வலிக்க வலிக்க எழுதுவாய்ங்களோ. போருப்பா… என்று புலம்பும் வாசகர்களே… வேறு வழியே இல்லை. கேட்டுத் தொலைங்கள்.) பேரம் படியாததால் பல நடிகைகள் கால்ல கட்டை விரலு சுளுக்கு, மேலுக்கு முடியல என்றெல்லாம் லீவ் லெட்டர் எழுதி தப்பித்துக் கொண்டார்கள். ரொம்ப போல்டாக, இவ்ளோ கொடுத்தா வர்றேன். இல்லேன்னா ஆளை விடுங்க என்று கூறியது ரெண்டே ரெண்டு பேர்தானாம். ஒருவர் நயன்தாரா, இன்னொருவர் ஸ்ரேயா.
முந்தைய ஆட்சி காலத்தில் இப்படி வராதவர்களுக்கு பச்சை மிளகாய் சட்டினி கொடுத்த கதையை பக்கம் பக்கமாக திட்டி தீர்த்த இன்றைய ஆட்சி மேலிடம், யாரையும் வற்புறுத்த வேண்டாம் என்று முன்பே சொல்லிவிட்டதாம். அதனால் பேரத்தை நீட்டித்து பிரச்சனையை முடித்துக் கொள்ளதான் நினைத்தார்களாம் பிலிம் சேம்பரில். அப்படியிருந்தும் இருவரிடமும் மாறி மாறி பேசியதில் இரண்டு பேருமே எஸ்கேப்.
இப்போது நயன்தாராவை விட்டுவிட்டு ஸ்ரேயா மீது ஆக்ஷன் எடுக்கலாமா என்று யோசித்து வருகிறார்களாம். எடுத்தா ரெண்டு பேரு மேலதானே ஆக்ஷன் எடுக்கணும்? இதென்ன ஓரவஞ்சனை என்கிற ‘காகித அம்புகள்’ இப்பவே வீசப்படுவதால் இந்த முயற்சியும் பணால் ஆகக் கூடும்.
Nayan and Shreya may escape from punitive action
There were reports earlier that Tamil Film Chambers are contemplating action against the actors Nayanthara and Shreya for having absented during the 100 years of Indian Cinema event. It was also reported that they were served show case notice too. However, sources close to the Chambers say, there is a rethinking to drop the charges against the actresses. It is also said that Nayanthara was a favorite in Tamil Films and hence people concerned recommended to drop her name from punitive action, but since Film Chambers might be questioned on the disparity in taking action between Nayan and Shreya, decided to drop the charges on both of them. It was also said that earlier Nayan and Shreya demanded hefty sum for their performances and since the committee could not afford they dropped their performances. It is like you scratch my back, I will scratch your back!!