‘நயன்தாராவுடன் சுத்தாதே…’ பேரன் உதயநிதிக்கு தாத்தாவின் அன்புக்கட்டளை
எலக்ஷன் வருது. ஒண்ணா சுத்தாதீங்க… இது தாத்தாவின் கட்டளை. ஒன்றாக சுற்றியது பேரன் உதயநிதி.
கோவிலுக்கு போவதையே கூட ‘ஒண்ணா சுத்துவது’ என்கிற சீப் டோனில் பார்க்கிற வழக்கம் இந்த சினிமா ரிப்போர்ட்டர்களுக்குதான் இருக்கிறது என்று உதயநிதி அலுத்துக் கொண்டாலும் உண்மை இதுதான். கடந்த சில தினங்களுக்கு முன் பழனி முருகனை தரிசிக்க சென்றார்கள் உதயநிதியும், நயன்தாராவும். இவர்கள் மட்டுமா போனார்கள்? ‘இது கதிர்வேலன் காதல்’ படத்தில் பங்கு பெற்ற கலைஞர்களும் போயிருந்தார்கள். ஆனால் பளிச்சென்று தெரிந்தது இவர்களின் ஜோடி பொருத்தம்தான். படத்தில் இருவரும் ஜோடியாக நடிப்பதால், இந்த ஜோடிக்கு தமிழ்நாடே சேர்ந்து கண் வைத்து படத்தை ஓட வைக்க வேண்டும் என்பது பிரார்த்தனையாக இருக்கலாம்.
பழனி என்றாலே ரோப் கார்தான் ஃபேமஸ். இந்த ரோப் காரில் உதயநிதியும் நயன்தாராவும் ஒன்றாக ஏறிப் போனார்கள். கிளம்புகிற நேரத்தில் இவர்களை வரவேற்க வந்த லோக்கல் உடன்பிறப்புகள், அண்ணே… உங்க சேஃப்டிக்கு நாங்க வேணா துணையா வரட்டுமா என்று கேட்க, தொந்தரவு வேணாம் என்று கூறிவிட்டாராம் உதயநிதி. இந்த செய்தி அப்படியே சென்னையிலிருக்கும் தாத்தாவுக்கு வந்து சேர, ‘எலக்ஷன் வர்ற நேரத்துல இப்படியெல்லாம் சுத்தறது கட்சிக்கு கெட்டப்பேரை வாங்கித் தரும். தவிர்க்கலாமேப்பா’ என்றாராம்.
நயன்தாராவையும் சிம்புவையும் சேர்த்து வச்சு பேச ஆரம்பிச்சுருச்சு ஊர். எனவே உதயநிதிக்கு ஒரு களங்கமும் வரப்போவதில்லை என்பதுதான் நீக்கமற நிறைந்திருக்கும் நிதர்சனம்.
It is election time, avoid roaming around…. Advises Grandpa
Recently the entire cast and crew who shot for Idhu Kadhirvelan Kadhal visited Palani hills and had darshan of the presiding deity Lord Muruga. Udhayanidhi and Nayanthara was conspicuous amongst the entire unit. They went together in the rope car to the up hills, which news was relayed to the grandpa. Grandpa seemed to have advised his grandson to avoid roaming around with Nayanthara or any other actress as it may spoil the reputation of the party. Since it is election time, as Parliament elections are to be held grandpa seemed to have cautioned his grandson.