நயன்தாராவை கர்ப்பிணியாக பார்க்க மனசில்லாத டைரக்டர்

வாழ்க்கையில் ஒரு முறையாவது ரஜினியோட நடிச்சுரணும் என்று இளம் நடிகர்கள் விரும்புவதை போல, நயன்தாராவுடன் சேர்ந்து நடிச்சுரணும் என்று இளம் ஹீரோக்கள் நாக்கை தொங்க போட்டுக் கொண்டு அலைகிறார்கள். அதை நிரூபிப்பது போல இருந்தது vaibav பேச்சு. பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டடித்த கஹானி படத்தை தமிழில் ‘என் அன்பே நீ எங்கே’ என்ற பெயரில் ரீமேக் செய்கிறார்கள். கஹானியில் வித்யாபாலன் நடித்த கேரக்டரில் இங்கே நயன்தாரா நடிக்கிறார். இந்த படத்தின் பிரஸ்மீட்டில்தான் லிட்டர் லிட்டராக வழிந்து தனது உள்ளக்கிடக்கையை உருவிக் கொட்டினார் vaibav

இந்த படத்தில் நான் ஒரு முக்கிய ரோலில் நடிச்சிருக்கேன். என்னிடம் கால்ஷீட் கேட்டு வந்தபோது இந்த படத்துல நயன்தாராதான் ஹீரோயின்னு சொன்னாங்க. உடனே நான் வேறு எதை பற்றியும் பேசல. நயன்தாராவோட நடிக்கிறது என்னோட பல காலத்து கனவு. நான் ரெடின்னு சொல்லிட்டேன் என்றார்.

படத்தின் இயக்குனர் சேகர் கமுல்லாவிடம் வரிந்துகட்டிக் கொண்டு கேள்வி கேட்ட பிரஸ், அப்படியே தர்மசங்கடமான கேள்விகளையும் அவிழ்த்துவிட, சற்றே தடுமாற்றத்துடன் அவற்றை எதிர்கொண்டார் அவர். அந்த கேள்வியில் ஒன்றுதான் இது. தேசிய விருது வாங்கிய வித்யாபாலனே படத்தின் பிரமோஷன்களுக்கும் பிரஸ்மீட்டுக்கும் வர்றாங்க. ஆனால் நயன்தாரா வர மாட்டேன்னு சொல்றாங்களே? நீங்க கேட்க மாட்டீங்களா?

அவங்க வேற படத்தின் ஷுட்டிங்கில் இருக்கறதாலதான் வர முடியல. மற்றபடி படம் ரிலீஸ் நேரத்தில் கண்டிப்பா வருவாங்க என்று சமாளித்தார் சேகர் கமுல்லா. படத்தில் நயன்தாரா கர்ப்பிணியாக நடிக்க தயங்கியதாக வந்த செய்திக்கும் அவர் விளக்கம் அளித்தார். வித்யாபாலன் இந்திப்படத்துல கர்ப்பிணியா நடிச்சிருந்தாங்க. ஆனால் இதில் நயன்தாரா அப்படி நடிக்கல. நானே அப்படி வைக்க வேண்டாம்னு நினைச்சேன். ஒரு பெண் தன் கணவரை காணவில்லை என்று ஐதராபாத் சிட்டி முழுக்க தேடி அலைகிற காட்சிகளே கனமாக இருக்கும். அவர் கர்ப்பிணியாக இருந்தால்தான் அந்த கனம் கூடுதலா இருக்கும் என்பதை நான் ஏத்துக்க மாட்டேன் என்றார் சேகர் கமுல்லா.

நயன்தாராவை கர்ப்பிணியா பார்க்க உங்களுக்கு மட்டுமில்ல, எங்களுக்கும் மனசு வராது….

Nee Enge En Anbe trailer launched on 14th Feb.

The remake of super hit Hindi film Kahaani which got Vidya Balan National Award for Best Actress, is being remade in bilingual – Tamil and Telugu. Nayanthara reprises Vidya Balan’s role in both the versions. The Tamil version titled Nee Enge En Anbe trailer was launched on 14th Feb. Meeting the press after the launch of trailer, Mahat who plays the lead in the film said that when the makers approached him for the film, and having learnt that Nayanthara playing the lead, he immediately gave the consent without thinking any further, as it was his dream to act with Nayan, he confided.

Speaking on the occasion the director Sekhar Kammulla said that as Nayan was shooting for another film, she could not make it to the trailer launch but she would be present during the pre-release press meet, he assured the reporters. He further stated that though in the original Vidya Balan is shown pregnant and searching for her husband, he did not feel that to get added sympathy Nayan should also be shown as pregnant. So he avoided showing Nayan as pregnant lady in search of her husband, in the Old City of Hyderabad, he explained.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சிம்புவை பிரிந்தார் ஹன்சிகா ட்விட்டர் மூலமாக ஒரு கட்டிங்!

கிடக்கறதெல்லாம் கிடக்கட்டும்... ரசத்தை எடுத்து குழம்புல ஊத்து கதையாக எப்போதும் யார் காதலையாவது நோட்டமிட்டுக் கொண்டேயிருக்கும் ரசிகர்களுக்கு இந்த செய்தி அவலாக இருக்குமோ, அனலாக தகிக்குமோ? எதுவாக...

Close