நயன்தாரா கர்ப்பிணியா…? ம்ஹும் ஒத்துக்க முடியாது….

ஒரு கர்ப்பிணி தன் கணவரை தேடியலைகிற கதைதான் கஹானி. வித்யாபாலன் நடித்த இந்த படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்து ஒட்டுமொத்த இந்தியாவையும் நெட்டுக்குத்தாக ஆச்சர்யப்பட வைத்தது. இந்த கதையை எந்த மொழியில் எடுத்தாலும் கலெக்ஷன் நிச்சயம் என்று கணக்குப் போட்டவர்கள், வித்யாபாலன் கேரக்டரில் யாரை நடிக்க வைக்கலாம் என்றெல்லாம் அலசி ஆராய்ந்து அதில் நயன்தாராவை நடிக்க அழைத்தார்கள்.

நயன்தாரா சாமியாரிணியாக கூட நடிக்கலாம். கர்ப்பிணியாக நடித்தால் நாடு தாங்குமா, அல்லது ரசிகர்கள்தான் ஏற்றுக் கொள்வார்களா? இருந்தாலும் இந்த படத்தில் நடிக்க நயன்தாராவும் ஆர்வமாக இருந்தார். அவந்திகா என்ற பெயரில் இப்படத்தை தமிழ் தெலுங்கு இரு மொழிகளில் எடுத்து வருகிறார்கள். சேகர்கமுலா இயக்கி வருகிறார்.

படத்தில் நயன்தாராவை கர்ப்பிணியாக காட்டவில்லையாம். அது வியத்தகு திருப்பம். ஏன்? ஒரு கர்ப்பிணி தன் கணவரை காணவில்லை என்று தேடுகிற போதுதானே பார்ப்பவர்களின் இதயம் வெடிக்கும். கண்கள் பனிக்கும்? அவர் வெறும் மனைவியாக மட்டுமே இருந்து கணவரை தேடினால் அந்த அழுத்தம் இருக்குமா? இப்படியெல்லாம் டைரக்டரை கேட்டால், உருக வைக்கணும். அதுதான் ஒரு டைரக்டரோட திறமை. படம் வந்த பிறகு சொல்லுங்க என்று கூறுகிறாராம்.

நயன்தாராவை கர்ப்பிணியாக பார்க்க அவருக்கும் மனசு இல்லை போலிருக்கிறது. ம்.. நடக்கட்டும்!

Nayanthara not shown as pregnant wife in Anamika

Anamika is the remake of Bollywood’s super hit film Kahani, purely based on the performance and the story of Vidya Balan. The film has collected over Rs.100 crores for a heroine based subject. Anamika is a bilingual film taken in Tamil and Telugu simultaneously, and directed by Sekar Kamula. Nayanthara reprises the role of Vidya Balan in the original. However there is a change in the remake. Nayanthara is not shown as pregnant wife in search of her husband. When quizzed about this, the director said, the purpose of showing Vidya as a pregnant wife is to bring weight to her character, which he has done in a different way in the remake. The question how will be answered on screen says the director confidently.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
இந்த சதிக்கு ரஜினியும் துணை போனார்….

புத்தகமே வாசிக்க தெரியாத காலத்திலிருந்து, முகப்புத்தகத்தில் கைகலப்பு நடத்தி சட்டையை கிழித்துக் கொள்ளும் இந்த காலம் வரைக்கும் ரசிகர்களின் உலகம் சினிமாதான்! தமிழகத்தை பொருத்தவரை சினிமாவும் அரசியலும்...

Close