‘நயன்தாரா வேணாம்….’ ஹீரோ பதிலால் நயன் அதிர்ச்சி

கருவ மரத்தில் செஞ்ச கட்டில்னா கனவு கூட முள் முள்ளா வருமா என்ன? அப்படிதான் வந்திருக்கிறது நயன்தாராவுக்கு. அவர் ஆசைப்பட்ட (நடிக்க மட்டும்தான்) ஒரே ஒரு ஹீரோ என்றால் அது தெலுங்கு ஹீரோ பாலகிருஷ்ணாதான்.

அழுகிற குழந்தைகளுக்கு இவரது முகத்தை காட்டியே ஆறு வேளை சோறு ஊட்டலாம். (இந்த விமர்சனத்திற்காக தெலுங்கு தேசத்திலிருந்து வரும் சோடா பாட்டிகள், ஆசிட் வீச்சுகளை சற்று அச்சத்துடனேயே எதிர்நோக்குகிறோம்) தப்பி தவறி கூட தனது பேட்டிகளில் ரஜினியுடன் நடிக்க ஆசை, கமலுடன் நடிக்க ஆசை, அஜீத் விஜய்யுடன் நடிக்க ஆசை என்று நயன்தாரா சொன்னதே இல்லை. அப்படிப்பட்டவரே ஆந்திராவில் லேண்ட் ஆகிவிட்டால், தேவுடுகாரு காரு வந்தால்தான் ஷுட்டிங்குக்கே வருவேன் என்கிற அளவுக்கு காருகளின் ரசிகை ஆகிவிடுவார்.

ராமராஜ்யம் படத்தில் பாலகிருஷ்ணாவுடன் நடித்த வகையில் நயன்தாராவின் இமேஜ் அவரை வேறொரு உலகத்திற்கு கொண்டு சேர்த்துவிட்டது. தொடர்ந்து பாலகிருஷ்ணா படங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிற அளவுக்கு இவருக்கு சம்பளம் தருகிறார்கள். இந்த ஜோடி முறைக்கு இவ்வளவு சலுகைகள் என்றால் அதை தவற விடுவாரா?

இந்த முறை அப்படியொரு புதுப்படத்திற்கு நயன்தாரா காய் நகர்த்த, இந்த தடவ ஒரு கேப் விடலாம்ப்பா. நயன்தாரா வேணாம். வேற நடிகையை பாருங்க என்று கூறிவிட்டாராம் பாலகிருண்ணா காரு.

யூத்துங்க கூட இப்படி அலட்ட மாட்டாங்க போலிருக்கே!

Nayanthara ignored for Balakrishna’s film

Nayanthara who eulogises Balakrishna to the extent that she wanted to be cast in all his films, for the simple reason, it was Balakrishna who convinced her to act again, post Prabhudeva break-up. He also cast her in his film, Rama Rajyam, which not only got her Best Actress Award, but also paved the way for resurrecting her career in southern Film industry. As a gesture she wanted to contribute in her own way to the popular hero. However, to her shock and dismay, Balakrishna this time has suggested to his director and producer to look for a heroine, preferably from Bollywood. Talks are already on for roping in a glamorous girl for the film. Nayanthara though bewildered, knows pretty well, how the film industry runs.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அழைத்தார் ருஷி, ஆம் என்றார் ரஜினி! -இது 32 வருஷத்துக்கப்புறமாம்….

ரஜினியின் ஜாதகம் தெரிந்தவர்களுக்கு ராஜ்பகதுரை தெரியாமல் இருக்க முடியாது. இப்போதிருக்கும் அல்லு சில்லு ஹீரோக்களின் ஆர்ப்பாட்ட பிரண்ட்ஸ் வட்டாரங்கள் அறிந்து கொள்ள வேண்டிய தெரிந்து கொள்ள வேண்டிய...

Close