நயன்தாரா வேண்டாம்… ஆன்ட்ரியா வேண்டாம்… ஹன்சிகாவுக்கு ஐஸ்!

வாலு படத்தின் பாடல் வெளியீட்டு விழா பிப்ரவரி 3 ந் தேதி நடைபெற இருக்கிறது. ஊரே ஒண்ணு கூடி மென்று துப்பிய ஒரு விஷயத்துக்கு அன்று விடையளிக்கப் போகிறார் சிம்பு. அவர் மேடையில் பேசும்போது அதுபற்றியெல்லாம் விளக்குவார் என்று எதிர்பார்த்தால் அங்குதான் ட்விஸ்ட். வாலு படத்தின் பாடல் வரிகளிலேயே அதற்கான பதிலை வைத்திருக்கிறார் அவர். பொதுவாக சிம்பு நடிக்கும் படங்களில் எல்லாவற்றையும் அவர் பார்த்து ‘ம்… நடக்கட்டும்’ என்ற பிறகுதான் நடக்கும். அந்த விஷயத்தில் அவர் ஒரு குட்டி கமல்.

பாடல் வரிகளையும் பார்க்காமல் விடுவாரா? மதன்கார்க்கி ஒரு வரி எழுதியிருக்கிறார். என்ன தெரியுமா? அதுவும் சிம்பு பாடுவதாக அமைந்திருக்கிறது அந்த வரிகள். ‘நயன்தாரா வேண்டாம். ஆன்ட்ரியா வேண்டாம். யூ ஆர் மை டார்லிங் ஹன்சி’ என்று போகிறது அந்த வரிகள். இப்படியொரு வரிகள் வேண்டும் என்று மதன்கார்க்கியிடமே அவர் கேட்டு வாங்கியதாகவும் கூறப்படுகிறது.

குடும்ப பஞ்சாயத்தை கோர்ட்டுக்கு இழுக்கிற மாதிரி சொந்த பஞ்சாயத்தை பாட்டுல இழுத்திருக்கிறார் சிம்பு. எப்படியோ ஊடல் மறைந்து கூடல் நடந்தால் சரி.

Simbu’s ‘No’ to Nayan and Andrea, but wants only Hansika!

Yes, Simbu is no more interested in Nayanrthara and Andrea and wants only his sweet heart Hansika. We are not saying this, but Simbu himself has said this, as one of the lines in a song in Vaalu.

It is heard that Simbu has requested personally to Madhan Karky, write a lyric for Vaalu which Simbu himself would be singing. He made sure that what he wanted to convey to his sweet heart Hansika, is included in the lyrics. Karky has obliged him and wrote a line saying, “Nayanthara Vendam, Andrea Vendam, You are My Darling Hansi”. Does it not please Hansika when he say those lines openly. Love brings out more cleverness, perhaps.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
‘ சேர்ந்தே வாங்க சிங்கங்களா ’ அஜீத் விஜய்க்கு அழைப்பு

சுமார் ஏழு ஆண்டுகளுக்கு பிறகு தியேட்டரில் நேரடி மோதல் நிகழ்த்திய அஜீத்தும் விஜய்யும் மீண்டும் அப்படியொரு மோதலுக்கு தயாராகிவிட்டார்கள். அண்மையில் வெளிவந்த ஜில்லாவும் வீரமும் ஒரே நாளில்...

Close