“நல்லா இறுக்கி அணைச்சு நடிப்பா…” – மகனுக்கு அப்பா கொடுத்த டிப்ஸ்!

என்னமோ ஏதோ என்றொரு படம். கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக் நடிக்கும் இப்படத்தின் பிரஸ்மீட், ஏக தடபுடலாக நடந்தது. கார்த்திக்கின் வாரிசாச்சே? அப்பா என்னென்ன டிப்ஸ் கொடுத்தார் என்பதை அறிய ஆர்வத்தோடு இருந்தது பிரஸ். ‘மிஸ்டர் சந்திரமௌலி… மிஸ்டர் சந்திரமௌலி’ டயலாக்கை இன்னும் எத்தனை வருஷமானலும் மறக்க முடியாது என்பதை போலவே கடல் படத்தையும் இன்னும் எத்தனை வருடமானாலும் மறக்க முடியாது. ஆனால் அது வேறு அழகு, இது வேறு என்னமோ? சரி… ‘என்னமோ ஏதோ’ பிரஸ்மீட்டுக்குள் வருவோம்.

‘தம்பி… காதலியோட கட்டிப் பிடிக்கிற மாதிரி சீன் வருமே, இதுல நடிக்கறதுக்கு அப்பாவிடம் டிப்ஸ் கேட்டீங்களா?’ என்றார் ஒரு குறும்புக்கார நிருபர். ‘எதுக்கும் பயப்படாதே. நல்லா இழுத்து வச்சு இறுக்கி அணைச்சு நடி’ன்னு சொன்னாரு அப்பா. அப்புறம்தான் எனக்கு தைரியமே வந்துச்சு’ என்றார் கௌதம்.

ஆரம்பத்தில் பயங்கர ஸ்டார்ட்டிங் டிரபுள் அவருக்கு. ஒரு நாளிதழ் நிருபர், தமிழிலியே ஒரு கேள்வி கேட்க அந்த தமிழை புரிந்து கொள்ள முடியவில்லை நவரச நாயகனின் வாரிசால். (இத்தனைக்கும் எல்.கே.ஜி குழந்தைகளே கூட புரிந்து கொள்கிற அளவுக்கு எளிமையான தமிழில்தான் கேட்டார் நிருபர்) இது புரியாமல் அவர் என்ன சொல்றார் என்று பக்கத்திலிருந்த டைரக்டரிடம் கேட்டார். அவர் ஆங்கிலத்தில் அதே கேள்வியை டிரான்ஸ்லேட் செய்து தர, அதற்கப்புறம் சிரித்துக் கொண்டே தமிழில் பதில் சொன்னார் கௌதம்.

இப்படிப்பட்ட தமிழ் சிங்கங்களை வைத்துக் கொண்டுதான் தமிழ்சினிமாவில் ஆடு மேய்க்க வேண்டியிருக்கு! கலி கால சினிமா….

Act with passion, advised father – Gautham Karthik

Gautham Karthik was asked by the press, during the press meet of his upcoming film, Ennamo Yedho, what advise did his father Karthik give to act in love scenes? “Don’t fear for anything, act with passion, by hugging tightly” advised my father. After that I have started to act more freely, confessed Gautham. However, he exhibited his lack of knowledge in Tamil, when a reporter asked him a question in Tamil, which he was unable to understand. When the director translated the question in English, he smilingly replied it in Tamil. Convent education stares?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
காலில் முள்ளு, இறக்கையும் பஞ்சர்… – என்னதான் செய்வார் வெங்கட்பிரபு?

பிரியாணி தள்ளிப் போனதில் அநியாயத்திற்கு விரக்தியில் இருக்கிறார் வெங்கட்பிரபு. அது வருகிற வரைக்கும் காத்திருப்பதை விட இன்னொரு படத்தை இயக்கலாம் என்று நினைத்திருந்தவரை, செமத்தியாக ‘லாக்’ போட்டுவிட்டார்...

Close