நல்ல கதையா இருந்தா நடிக்கலாம்… அட்லீயிடம் அஜீத் வாக்குறுதி

ராஜா ராணி ஹிட், தமிழ்சினிமாவில் நயன்தாராவுக்கும் ஆர்யாவுக்கும் புது ரத்தம் பாய்ச்சியிருக்கிறது. சேட்டை தந்த ஓட்டை சட்டையை கழற்ற முடியாமல் வெட்கத்தோடு சுற்றிக் கொண்டிருந்த ஆர்யாவுக்கு ராஜா ராணி நிஜமாகவே ஏணிதான். தனக்கு அந்தஸ்த்தை ஏற்படுத்திய டைரக்டருக்கு தன்னாலான உதவி ஏதாவது செய்தாக வேண்டுமே? உங்களுக்கு என்ன வேணுமோ கேளுங்க என்றாராம் ஆர்யா அட்லியிடம்.

காரோ, பங்களாவோ கேட்டிருந்தால் அவரது கற்பனா சக்தி மீதே காரை ஏற்றிவிடலாம். ஆனால் அவர் கேட்டதுதான் அல்டிமேட் ஆசை. அஜீத் சாருக்காக ஒரு கதை வச்சுருக்கேன். அதை அவரிடம் சொல்லணும். ராஜா ராணி ஹிட்டுக்கு பிறகு அவரை மீட் பண்ணி பேசியிருந்தாலும், கதை கேளுங்க என்று கேட்கிற தைரியம் எனக்கு இல்லே. அதுக்கு நீங்க ஏற்பாடு பண்ணிக் கொடுங்களேன் என்றாராம்.

மீண்டும் ஆர்யாவுடன் அஜீத் அட்லீ சந்திப்பு நடந்ததாம். கதையை ரெடி பண்ணுங்க. நல்லாயிருந்தா கண்டிப்பா பண்ணுவோம் என்று அஜீத் வாக்குறுதி கொடுத்திருப்பதால், அட்லீ காட்டில் அடை மழை. அவ்வளவும் கதை மழை.

Ajith says ‘Yes’ to Raja Rani director

Atlee, who debuted in direction with Raja Rani continues to be in cloud nine, not only because of the roaring success of his debut film, but also because he was able to get the ‘in principle’ nod from Thala Ajith.

Arya too is a happy man that his sagging career got a fillip through Atlee’s Raja Rani, and now the recent hit of ‘Arrambam’ with Ajith, has stabilised his standing in Kollywood, for now. To reciprocate his gratitude, he wanted to do something unique to the director and asked him what he wants. The smart director, he is, Atlee did not ask him any material benefits. But he did ask Arya to arrange a meeting with Ajith, with whom he wanted to associate in a film. Lightened by this request, Arya immediately arranged a meet with Ajith.

Atlee expressed his happiness on meeting the star and told him about his desire to direct a film with him in the lead. It is learnt that Thala Ajith seems to have responded positively, saying to bring him with a good story, so that they can work together.

We hope to see Atlee-Ajith combination soon in a film!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
நாலு கோடிய எண்ணி வச்சுட்டு எங்க வேணா போ… – குத்து ரம்யாவுக்கு குடைச்சல் தரும் ஹீரோ!

இப்போதெல்லாம் படத்தில் நடிக்க ஒப்பந்தம் போடும்போதே ‘பாதியில விட்டுட்டு ஓடிட மாட்டீங்களே... ’ என்று கேள்வி மேல் கேள்வி கேட்டுதான் நடிகைகளுக்கு அட்வான்சே கொடுக்க வேண்டும் போலிருக்கிறது....

Close