நஸ்ரியாவின் அடங்காத இமேஜ் சேம் சைட் கோல் போட்ட தயாரிப்பாளர்

நஸ்ரியா நடித்த முதல் படம் இன்னும் ரிலீசே ஆகவில்லை. அதற்குள் நஸ்ரியா நாடறிந்த நடிகையாகிவிட்டார். அதற்கு அவர் நடித்த படங்களின் வெற்றி தோல்விகள் மட்டும் காரணம் அல்ல, விவகாரமான பொண்ணு என்கிற இமேஜூம்தான். இந்த ‘அடங்காத முனியம்மா’ இமேஜை அவர் நடித்து வரும் ‘வாய் மூடி பேசவும்’ படத்தின் பிரஸ்மீட்டிலும் நிலைநாட்டினார் படத்தின் தயாரிப்பாளர்களுள் ஒருவரான சஷிகாந்த்.

‘நாங்க நஸ்ரியாவை இந்த படத்திற்கு புக் பண்ணும்போதே சக தயாரிப்பாளர்கள், ‘அந்த பொண்ணா? எதுக்கு வீணா வம்புல சிக்குறீங்க? வேற யாராவது பாருங்க. அந்த பொண்ணு ஷுட்டிங்ல கோ ஆபரேட் பண்ணாது’ என்றெல்லாம் அச்சமூட்டினார்கள். ஆனால் நான் அதுக்கெல்லாம் கவலைப்படல. புரபஷனலா அவங்க வேலையில் அவங்க சரியா இருக்காங்க. அதை தாண்டி ‘நான்-புரபஷனலா’ நடந்துகிட்டாதான் சிக்கல் என்றார். (அப்படின்னா தப்பெல்லாம் தனுஷ் அண் கோஷ்டிகள் மேலதான்னு சொல்லாமல் சொல்லிட்டாரே?)

‘காதலில் சொதப்புவது எப்படி’ படத்தை இயக்கிய பாலாஜி மோகன்தான் இந்த படத்தின் இயக்குனர். ‘வாய்மூடி பேசவும்’ என்ற தலைப்புக்கு படத்துல சரியான ஜஸ்டிபிகேஷன் கொடுத்துருக்கேன். நீங்க படம் பார்த்தால் புரியும். இந்த படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் ஹீரேவா நடிச்சிருக்கார். அவரை தமிழ்ல லாஞ்ச் பண்ணனும்னு அவர் நினைச்சப்போ என்னைவிட பெரிய இயக்குனர்களை தேர்ந்தெடுத்திருக்கலாம். ஆனால் கதைதான் முக்கியம்னு நினைச்சு இந்த படத்தில் நடிக்க வச்சார். துல்கருக்கு கேரளாவில் எப்படி ஒரு மாஸ்னு எனக்கு நல்லா தெரியும். ஆனால் எவ்வித பந்தாவும் இல்லாமல் அவ்வளவு டெடிகேட்டிவா நடிச்சார்’ என்றார் பாலாஜி.

மீண்டும் நஸ்ரியா புராணம்… இது வேறு யாருமல்ல, ஹீரோ துல்கர் சல்மான்தான்.

‘ஷுட்டிங்ல அந்த சீன்ல எப்படி பர்பார்ம் பண்ணணும்னு ரொம்ப யோசிப்பேன். ஷாட்டுக்கு முன்னாடி நான் நிறைய அதுபற்றி ஹோம் வொர்க் பண்ணுவேன். ஆனால் நஸ்ரியா அப்படி கிடையாது. யூனிட்ல எல்லாருகிட்டயும் வளவளன்னு அரட்டையடிச்சிகிட்டேயிருப்பாங்க. ஷாட் ரெடின்னதும் வந்து அப்படியே அழகா நடிச்சிட்டு போயிருவாங்க. அவங்களுக்கு கல்யாணம் ஃபிக்ஸ் பண்ணியாச்சு. பட்… அவங்க தொடர்ந்து நடிக்கணும்னு நான் விரும்புறேன் என்றார்.

அதற்கப்புறம் பேசிய நஸ்ரியா, ‘துல்கர் சொன்னதை நான் ஏத்துக்குறேன். கல்யாணத்துக்கு பிறகும் நான் நடிப்பேன்’ என்றார் உறுதியாக.

அப்படின்னா, நயன்தாரா, ஹன்சிகா, தமன்னா, காஜல் அகர்வால்களுக்கு சோதனை காலம் முடியவில்லையா?

I will continue to act in films even after marriage – Nazriya

The audio launch of Vaayai Moodi Pesavum was held on 14th March at Sathyam multiplex, Chennai. The Dulquer Salman and Nazriya Nazim who play the lead in the film along with director Balaji Mohan, other cast, crew and producers participated in the event.

Sashikanth, one of the producers of the film has revealed that while his colleague producers were not inclined to cast Nazriya in the film, because of her un-cooperative ‘image’ she has in the industry, he was very particular casting Nazriya in the film, as she is a professional artiste. “As long as one is within the professional limit there is no scope for quarrel and misunderstanding,” he added.

The director Balaji Mohan has indicated that one can understand how he has given full justification for the title, in the film. Speaking about the hero Dulquer Salman, son of super star Mammotty, he said though Mammootty could have launched his son in Tamil film industry through his known established director, he allowed Dulquer to act in his film, as he gave preference to the story of the film. He also appreciated the dedication shown by Dulquer despite the fact that he was a mass hero in Malayalam film industry.

Dulquer Salman has praised the talent and skills of Nazriya. He said while he make mental preparation as to how he should convey the emotions, Nazriya who would be chit chatting with unit members, would move in once the director calls ‘action’ and performs with ease. He also requested her to continue to act in films after her marriage.

Finally Nazriya responding to Dulquer Salman’s request said that she would continue to act in film, even after the marriage.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சூரியனை விட 1300 மடங்கு பெரிய மஞ்சள் நட்சத்திரம் கண்டுபிடிப்பு

சூரியனை விட 1300 மடங்கு பெரிய மஞ்சள் நட்சத்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிலி நாட்டில் உள்ள அடகாமா என்ற இடத்தில் மிகப்பெரிய டெலஸ்கோப் நிறுவப்பட்டுள்ளது. அதன் மூலம் விண்வெளியில்...

Close