நஸ்ரியாவுக்கு கல்யாணமா? சுளையாக கொடுத்த அட்வான்ஸ் திரும்புமா?

நஸ்ரியாவின் கல்யாணத்துக்கு இப்போ என்ன அவசரம் என்று சக சினிமா ஹீரோக்கள் அசடு வழிந்து கொண்டிருக்க, மீடியாவில் டும் டும் டும் கொட்டிவிட்டார்கள் இன்று. நஸ்ரியா தன்னுடன் மலையாள படத்தில் நடித்து வரும் பகத் பாசிலை மணக்கவிருக்கிறாராம். அதுவும் ஆகஸ்டில் கல்யாணமாம். இந்த செய்தி யாரால் கசிய விடப்பட்டது என்பதுதான் நஸ்ரியாவுக்கே தெரியாத சீக்ரெட். இன்னும் சில மணி நேரங்களிலோ, அல்லது சில நாட்களுக்குள்ளோ அவரது மறுப்பு வெளிவரக் கூடும். ஏனென்றால் நஸ்ரியாவை அவ்வளவு சீக்கிரம் கல்யாணத்திற்கு அனுமதித்தால் அவர் நடித்து ரிலீசுக்கு நிற்கும் படங்களின் கதி என்னாவது?

அவருக்கு அட்வான்ஸ் கொடுத்திருக்கும் தயாரிப்பாளர்களே மேளக்காரரின் நாதஸ்வரத்தை பிடுங்கி வைத்துவிடுவார்கள். நடிகர் ஜீவாவுடன் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார் நஸ்ரியா. அதுபோக வேந்தர் மூவிஸ் தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்கவும் அட்வான்ஸ் வாங்கியிருக்கிறார். நடுவில் ஜெய்யும் நஸ்ரியாவும் சிரித்து சிரித்து பேசி அரை கிணறு தாண்டியிருக்கிறார்கள் அந்த விஷயத்தில். இது எல்லாவற்றையும் ஒரே நொடியில் அழித்துவிட்டு பகத் பாசிலுக்கு கழுத்தை நீட்ட, நஸ்ரியா என்ன பொம்மையா?

ஒருவேளை செய்தி உண்மையாக இருப்பின், ஜெய்க்கு நஸ்ரியா கொடுத்த பெப்பே… என்று சிங்கிள் ஸ்மைலில் பைலை குளோஸ் பண்ணிவிடுவார்கள் கிசுகிசு எழுத்தாளர்கள்.

Nazriya Nazim to tie the knot to Fahadh Faasil

Nazriya Nazim who rose to fame with ‘Neram’ will be tying the knot to Malayalam actor Fahadh Faazil in August this year. The marriage has been fixed by elders from both the families and it is not a love marriage. Director Fazil has reportedly announced that the marriage will take place during August this year. Fahadh Faasil took the Malayalam industry by storm last year as he had as many as 12 releases last year.

Meanwhile the producers who have paid her advance to do their films will now be frantically seeking clarification from Nazriya as to how she would plan to do their films, or if she would be refunding their advance. What will happen to Jai friendship is another question gossip mongers will be interested to know about.

In any case marriage is a good thing to happen in one’s life and offer our best wishes!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஐஸ்வர்யா தனுஷின் காலில் விழுந்து ஆசிபெற்ற ஹீரோ

தனுஷ் செல்வராகவனுக்கு அப்பா என்கிற ஒரே குவாலிபிகேஷன் போதும், ஃபாதர் ஆஃப் யூத் ஆகிவிட்டார் கஸ்துரிராஜா. நேற்று அவர் தயாரித்து இயக்கிய ‘காசு பணம் துட்டு’ படத்தின்...

Close