நஸ்ரியாவுக்கு ரிட்டர்ன் டிக்கெட்? முதல் ‘கல்தா’ ஜீவாவிடமிருந்து…
டிக்கெட் முன்பதிவு மையத்தில் ஒரே கூட்டம். அத்தனை பேரும் ஒரே ஆளுக்கு டிக்கெட் எடுக்க கூடியிருப்பதுதான் ஆச்சர்யம். அதுவும் ரிட்டர்ன் டிக்கெட்.
‘ஒரு நடிகை நாடகம் காட்டுகிறார் ’ என்று முதலில் நம்பப்பட்ட நஸ்ரியாவின் தொப்புள் மேட்டர், பலரது தொப்புள் கொடியையே அறுத்துவிடுகிற அளவுக்கு சீரியஸ் ஆனதையும், அப்படியே அவரை குந்துனாப்ல கொண்டாந்து கேஸை வாபஸ் வாங்க வைத்ததையும் நாடு அறியும்.
ஷுட்டிங் ஸ்பாட்ல பீஸ் புல்லா இருக்கணும். ஷுட்டிங் முடிஞ்சுட்டுன்னா பீர் புல்லா இருக்கணும் என்கிற பாலிஸியோடு வாழ்கிற ஸ்டார்களையும், அப்படி வாழாத ஸ்டார்களையும் கூட நஸ்ரியாவின் அதிரடி ஆக்ஷன் திணற திணற யோசிக்க வைத்திருக்கிறது. ‘இனிமேல் அந்த பொண்ணு ஸ்பாட்டுல இருந்தா சுதந்திரமா தம்மு கூட அடிக்க முடியாது போலிருக்கே’ என்று யோசித்த நடிகர்கள், கூடி கூடி குழி பறித்து வருகிறார்களாம் அவரது ஆட்டத்திற்கு.
தனது புதிய படத்திற்காக நஸ்ரியாவின் கால்ஷீட் வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்த ஜீவா, முதல் வேலையாக அவரது மேனேஜருக்கு போன் பண்ணி ‘அந்த பாப்பா வேணாம்ங்க. ரொம்ப சிரமப்படாதீங்க. நான் வேற ஹீரோயினை புக் பண்ணிக்கிறேன் ’ என்று கூறிவிட்டாராம். முதல் ‘வேணாம்’ ஜீவாவிடமிருந்து வந்ததையடுத்து, இன்னும் இதுபோன்ற ‘வேணாம்’களை கோடம்பாக்கத்திலிருந்து எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாராம் நஸ்ரியா.
உச்சி மீது கல்லெறிந்தால் மாங்காயும் விழும், சமயத்தில் அந்த கல்லே கூட தலையில் விழும். நஸ்ரியாவின் தலையில் விழுந்தது எது என்பதை காலம் இன்னும் சில வாரங்களில் சொல்லிவிடும்.
ஆமா…. அவ்வளவு ஷார்ப்பாவா இருக்காங்க இங்க?
Jiva opts for another heroine, Nazriya faces uphil task
Nazriya episode might have ended, but its after effects have just started to raise its head. The first casualty is her film with Jiva. Nazriya was to have paired with Jiva in his upcoming film. But the actor seemed to have felt uncomfortable after the problem Nazriya has created to the film unit and its producer. He has reportedly asked his manager not to sign her up for the film, and he would look for another heroine. With Jiva’s unofficial announcement doing rounds, other actors and production houses too would start thinking on those lines, perhaps. Unless Nazriya make amends in near future, it will be uphill task for her to get a foot-holding in Kollywood.