நஸ்ரியா செய்வது Marketing publicity… – டைரக்டர் சற்குணம் ஆவேசம்!
நஸ்ரியா விவகாரத்தில் baloon வெடிக்கிற நேரம் வந்தாச்சு. இரண்டு நாள் சலசலப்புக்கு பிறகு, டூப்பை வைத்து படம் எடுத்ததாக கூறப்பட்ட டைரக்டர் சற்குணம் ஒரு விளக்கத்தை அனுப்பியிருக்கிறார் பத்திரிகையாளர்களுக்கு. அதில் நஸ்ரியாவை மீடியாவோடு அமர்ந்து படம் பார்த்துவிட்டு அதில் டூப்பை பயன்படுத்தியிருப்பதாக சொல்ல தயாரா என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
களவாணி, வாகை சூடவா என்கிற இரண்டு தரமான படங்களை எடுத்தவன் நான். இனிக்க இனிக்க என்ற பாடலை நான் நஸ்ரியாவை வைத்துதான் எடுத்தேன். படத்தில் ஒரு குளோஸ் அப் ஷாட் விடுபட்டுவிட்டது. அதை எடுப்பதற்காக நான் நஸ்ரியாவை அழைத்தேன். அவரே யாராவது டூப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறியிருந்தார். அந்த முழு பாடலுக்குமே நான் டூப்பை பயன்படுத்தி எடுத்ததாக அவர் கூறுவதை அவரால் நிரூபிக்க முடியுமா என்றெல்லாம் கேள்வி எழுப்பியிருக்கும் சற்குணம், படத்திற்கு க்ளீன் யூ சர்டிபிகேட் வாங்கியிருப்பதையும் தனது விளக்கத்தில் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
ஒருவேளை குளோஸ் அப்பில் வரும் அந்த காட்சி நஸ்ரியாவுக்கு உறுத்தலாக இருந்தால் அதை நீக்கவும் தயாராக இருப்பதாக கூறியிருக்கிறார் அவர். இறுதியாக சற்குணம் கூறுவது இதுதான்.
‘ஒருவேளை தனது Marketing publicity க்காக அவர் இதை செய்திருக்கலாம்….’
இப்ப இருக்கிற பி.ஆர்.ஓ வே நல்லாதானே வேலை செய்யுறாரு. அப்பறம் ஏன் நஸ்ரியா?
Director Sargunam refutes Nazriya’s allegations
Director Sargunam who is awaiting the release of his latest Naiyaandi with Dhanush and Nazriya in the lead, has refuted the allegations Nazriya has made, using body double in an intimate scene in the film. In a statement issued to the media, he challenged to prove her allegations by watching the scene sitting along with the media. He went on to say that Nazriya in fact had asked him to use a body double when he approached her to shoot a close up shot. He also pointed out that if there is an obscene sequence in the film, how could the film has received clean U certification from censors. He is ready to remove the scene from the film, if Nazriya feels uncomfortable with it, he has assured in the statement. Finally he opined that perhaps to gain cheap publicity Nazriya would have made this allegation. Well, if Nazriya does it for publicity, what is the gain she will derive out of it? In fact it will damage her reputation to say the least. It appears that the film has a weak PRO who is unable to douse the flame with a calming effect!