நஸ்ரியா ஹேப்பிஈஈஈஈஈஈ

ஒருவேளை செய்தி உண்மையாக இருப்பின், ஜெய்க்கு நஸ்ரியா கொடுத்த பெப்பே… என்று சிங்கிள் ஸ்மைலில் பைலை குளோஸ் பண்ணிவிடுவார்கள் கிசுகிசு எழுத்தாளர்கள் என்றுதான் கடந்த செய்தியை முடித்திருந்தோம். வேறு வழியே இல்லை. அதே வார்த்தைகளோடுதான் இந்த செய்தியை தொடர வேண்டியிருக்கிறது. எப்படியாவது நஸ்ரியாவுடன் நடித்துவிட வேண்டும் என்று துடியாய் துடித்த ஜீவாவுக்கும், ஜெய்யுக்கும் அல்வா கொடுத்துவிட்டு பகத் பாசிலுக்கு கழுத்தை நீட்ட சம்மதித்துவிட்டார் நஸ்ரியா.

இன்று கேரளாவை கலக்கிய ஒரே செய்தி நஸ்ரியாவின் திருமண செய்திதான். ஆகஸ்ட்டில் திருமணம் என்று ஃபாசிலே அறிவித்துவிட்டார். ஃபேஸ்புக்கில் தனது வருங்கால கணவருடன் சேர்ந்து நிற்கிற படங்களையும் வெளியிட்டு நஸ்ரியா ஹாப்பிஈஈஈஈஈஈ என்று கூறிவிட்டார் அவரே.

அவரை வைத்து படம் எடுத்த தமிழ் தயாரிப்பாளர்கள், எடுக்க நினைத்த தயாரிப்பாளர்கள் அத்தனை பேரும் நஸ்ரியாவுக்கு திருமண வாழ்த்து சொல்லியிருப்பார்களா, அல்லது இந்த பொண்ணு இப்படி பண்ணிருச்சே என்று கவலைப்பட்டிருப்பார்களா என்றெல்லாம் சந்தேகப்படவே வேண்டாம். பின்னால் சொன்னதுதான் நடந்திருக்கும். பட் நஸ்ரியா மட்டுமல்ல, அவரது ரசிகர்களாகிய தமிழர்களும் ஹேப்பிதான்.

Nazriya’s marriage with Fahadh Faasil confirmed

Earlier we had reported that Narzriya would be tying the knot to Malayalam actor Fahadh Faasil which has been now confirmed. Fahad Faasil has tweeted that the marriage between himself and Nazriya will be held in Aug. 2014. Nazriya too has posted the photo of Faasil and her and wrote ‘Happieeeeeeeeeeee’.

Now the producers and actors who had cast her in their films have their fingers crossed if she would complete their film or would they have to go in for another actress.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
நஸ்ரியாவுக்கு கல்யாணமா? சுளையாக கொடுத்த அட்வான்ஸ் திரும்புமா?

நஸ்ரியாவின் கல்யாணத்துக்கு இப்போ என்ன அவசரம் என்று சக சினிமா ஹீரோக்கள் அசடு வழிந்து கொண்டிருக்க, மீடியாவில் டும் டும் டும் கொட்டிவிட்டார்கள் இன்று. நஸ்ரியா தன்னுடன்...

Close