நானே அப்பா டக்கர்… எங்கிட்டேவா? – பவர் ஸ்டாரை புலம்ப வைத்த கோலிசோடா சம்பள பாக்கி!

‘கோலிசோடா’வில், சோடா விஜய் மில்டனுக்கும், வெறும் கேஸ் மட்டும் அப்படத்தில் நடித்த பவர் ஸ்டார் சீனிவாசனுக்கும் கிடைத்திருக்கிறது. இப்படி ஓரு ஏப்பத்திற்கு ஆளாவோம் என்று அவரே நினைத்து பார்க்கவில்லை. அந்த ஏமாற்றத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் ஒரு படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பொங்கி வெடித்துவிட்டார் பவர். கோடம்பாக்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது அவரது புலம்பல்.

‘இன்றைய சினிமா’ என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழா ஏ.வி.எம் ஏ.சி தியேட்டரில் நடந்தது. விழாவுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரிணி வந்திருந்தார். அவரது பக்கத்திலேயே பவர் சீனிக்கும் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. காங்கிரஸ் எம்.எல்.ஏ பக்கத்தில் சீட்டிங் கேசில் சிறைக்கு போனவருக்கும் இடம்? தப்பி தவறி கூட பவர் பக்கம் திரும்பவில்லை விஜயதாரிணி. (எதற்கு வம்பு என்பதால் இருக்குமோ? )

அவ்வளவு சின்ன தியேட்டரில் ஊர் கொள்ளாமல் கூட்டத்தை கூட்டினால் என்னாகும்? வந்திருந்த நிருபர்களின் மடியில் எல்லாம் சொந்தக்காரர்களை உட்கார வைக்க பார்த்தார்கள் விழா குழுவினர். இதென்னடா வம்பா போச்சு என்று தப்பித்தோம் பிழைத்தோம் என தியேட்டருக்கு வெளியே ஓடிய நிருபர்களுக்கு பவர் ஸ்டாரின் ஸ்பீச் மறுநாள்தான் தெரிய வந்தது. பிரஸ்சுக்கு என்று தனியாக இடம் ஒதுக்கினால்தானே நியூஸ் வரும்? இந்த உண்மை கூட புரியாமல் ஆர்வத்தில் திரிந்தது படக்குழுவும் அவர்களை நம்பி வந்த உறவு சங்கிலிகளும். போகட்டும்… விழாவில் பவர் பேசியதென்ன?

‘நான் ‘கோலிசோடா’ என்ற படத்தில் நடிச்சேன். அந்த படம் பெரிய ஹிட்டுன்னு சொல்றாங்க. ஆனால் எனக்கு வந்து சேர வேண்டிய சம்பளம் இன்னும் வந்து சேரல. ஊரே என்னை அப்பா டக்கர்ங்குது. என்னையே ஏமாத்திட்டாங்கன்னா அவங்க எவ்வளவு பெரிய அப்பா டக்கரா இருக்கணும்?’ என்றார் பரிதாபமாக.

வேணும்னு பண்ணியிருக்க மாட்டாங்க. ஒரு அடையாளம் வேணும்னு பண்ணியிருப்பாங்க!

Power Star Srinivasan says he has not received his salary from Vijay Milton?

Indraya Cinema audio release was held at AVM Cine Hall with near and dear of the makers of the film occupy the hall leaving no space for the press. Ignoring the difficulties few have attended the event. Congress MLA Vijayatharini was the Chief Guest on the occasion. 

Speaking on the occasion, Power Star Srinivasan expressed his dismay over non payment of salary for his work in the recently released super hit film Goli Soda. He said, “Despite Goli Soda has done good business, the makers have not paid my salary till date,” he lamented

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
மேனேஜர்கள் நீக்கம்…. அதர்வாவின் அதிரடிக்கு லவ்தான் காரணமா?

பழைய கழிதலும் புதியன புகுதலும் என்கிற சித்தாந்தம் எப்பவும் மாறப்போவதேயில்லை. அதர்வா செய்தது சரியா, தவறா என்பது பற்றியும் இப்போது பேச்சில்லை. ஏனென்றால் தனக்கு கேரியர் முக்கியம்...

Close