நான்தான் இல்லேங்கிறேன்… அப்புறம் என்ன சும்மா சும்மா? ஆத்திரப்படும் கோலிசோடா விஜய் மில்டன்!

கொல வெறியில் இருக்கிறார் விஜய் மில்டன். தமிழ்சினிமாவை புரட்டிப்போட்ட படம் என்று சொல்வதை விட, தமிழ்சினிமா காரர்களை புரட்டிப் போட்ட படம் கோலி சோடா என்றால் பொருத்தமாக இருக்கும். சூதுகவ்வும் மாதிரி ஒரு படம் பண்றோம் சார்… என்று யாராவது யாரையாவது கவிழ்த்துக் கொண்டேயிருப்பார்கள் சினிமாவில். அவர்கள் வாயிலிருந்து சூதுகவ்வும் விடைபெற்று இப்போது கோலி சோடா இடம் பிடித்திருக்கிறது. இதற்காக பெருமைப்பட வேண்டிய விஜய் மில்டனை ஒரு கோஷ்டி கதற கதற கோபப்பட வைத்திருக்கிறது. அவரது இந்த படைப்பே திருட்டு படைப்பு என்று கொளுத்திப் போட்டுவிட்டார்கள். அப்புறம்? அவர்கள் நினைத்ததுதான் நடந்திருக்கிறது.

இனிமேலும் என் மேல் இப்படி அபாண்டமா பழி சுமத்தினா, நான் சும்மாயிருக்க மாட்டேன். அவ்ளோதான் சொல்லிட்டேன் என்கிற அளவுக்கு கோபத்தின் எல்லைக்கே போய் விட்டார் அவர். (இருக்காதா பின்னே?) இப்படி பழி சுமத்திக் கொண்டிருப்பவர்களுக்காகவே ஒரு ஸ்பெஷல் வீடியோவை எடுத்து தனது ஃபேஸ்புக்கில் ஓட விட்டிருக்கிறார். அந்த யூ ட்யூப் லிங்க் இப்போது உங்களுக்காக.

இவ்வளவு வெளிப்படையாக அவர் விளக்கம் அளித்த பிறகும் இந்த விஷயத்தை துருவி துருவி கருவிக் கொண்டிருந்தால், அது நல்லதுக்கு இல்ல. ஆமாம்…!

இதோ அந்த வீடியோ லிங்க் http://www.youtube.com/embed/2ovESZVCe94?rel=0

Vijay Milton rubbishes allegations of plagiarism

Vijay Milton whose Goli Soda is doing good business at the Box Office through good word of mouth, has rubbished the accusation of plagiarism. He called the allegations as baseless and asked anyone to prove the allegations with evidence. “I think all such allegations are baseless and I challenge that person who is making such accusations to prove me wrong with evidence. I have material to prove that this is my own work. I don’t mind handling this matter legally but that person should bring forth evidence too,” he added. “I have had this story for many years. I knocked on several producers’ doors and all turned me down. But then I started making the film on my own. I would work as a cinematographer during the weekdays and use the money earned from it to shoot the film during the weekend,” added Milton. Milton also believes that plagiarized story will never yield success. “I strongly believe that by stealing someone else’s story, one can’t make a successful film. There can be films with similar stories but you can’t make a successful film with a story that belongs to someone else,” he said. “What can you possibly do with a story? Because there are other departments such as screenplay, dialogues, music and execution that are equally important for a film. Therefore, you can’t make a film just by stealing a story,” added the director.

He has also posted a video on his face book page for those who make baseless allegations.

Check the video link here www.youtube.com/embed/2ovESZVCe94?rel=0

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
நீ பார்த்து.. எனை ரசிச்சா.. “மாலுமி” படத்திலிருந்து மெலடி பாடல்

http://www.youtube.com/watch?v=ok4Z5J0-0xI

Close