‘நான் எங்கயும் ஓடுறதா இல்ல…’ எரிச்சலில் ஜனனி அய்யர்!
தமிழ்சினிமாக்காரர்களின் திடீர் தமிழ் மோகம் மெய்சிலிர்க்க வைக்கிறது. மீகாமன், தெகிடி என்றெல்லாம் பெயர் வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். (ஏதோ தெலுங்கு படமாம்ல என்று ரசிகர்கள் குழம்பி பின்பு சகஜநிலைக்கு திரும்பும் அபாயமும் இருக்கிறது ) ஆனால் ‘தெகிடி என்றால் என்ன?’ என்று கேட்கிற நண்பர்கள் தமிழ் அகராதியை பார்த்து தெரிந்து கொள்ளவும் என்றார் அப்படத்தின் இயக்குனர் ரமேஷ். இவர் எம்.பி.ஏ பட்டதாரியாம்.
இவ்ளோ தொலைவு வந்தாச்சு. அதையும் நீங்களே சொல்லிடுங்க என்று நிருபர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர் தெகிடிக்கான தமிழ் விளக்கத்தை அளித்தார். தெகிடி என்றால் சூது விளையாட்டின் ஒரு வகையாம். தமிழ் அகராதியில் ‘புரட்டு’ என்று எழுதியிருக்கிறார்கள். கிரிமினாலஜி படித்துவிட்டு வருகிற ஹீரோ, அவர் சந்திக்கும் சவால்கள் என்று போகுமாம் படம்.
சூதுகவ்வும் படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த அசோக் செல்வன்தான் ஹீரோ. இவருக்கு ஜோடி நம்ம ஜனனி ஐயர். படத்தை பற்றி நாலு வரி சொல்லுங்க என்று ஜனனியை அழைத்தால், அவர் தன் சொந்த கதை சோகக்கதையை சொல்லிவிட்டு போனார். ‘தமிழ்ல நான் நடிச்ச மூணாவது படம் இது. அதுக்குள்ளே நான் தமிழ்சினிமாவை விட்டுட்டு ஓடிட்டதா ஒரு சிலர் எழுதியிருக்காங்க. நல்லா தெரிஞ்சுக்கங்க. நான் எங்கயும் ஓட மாட்டேன். இங்க இருந்து நிச்சயம் ஜெயிப்பேன்’ என்றார் அழுத்தம் திருத்தமாக.
ஜனனியோட வேகத்தை பார்த்தா, நயன்தாரா லட்சுமிமேனனெல்லாம் கூட நடுங்கியாகணும் போலிருக்கே?
Thegidi team meets the press
The soon to be released film Thegidi’s press meet was held with all the cast and crew attended the event. When asked what the meaning of Thegidi is, initially the director Ramesh, an MBA graduate, refused to give, but subsequently obliged the reporters. He said the word Thegidi refers to a type of gambling. It means ‘cheat’ as per Tamil literary dictionary. The film is about the challenges faced by hero who has done ‘criminology’, said the direction. Ashok Selvan who co-starred with Vijay Sethupathi in Soodhu Kavvum will be playing the male lead, while Janani Iyer plays his love girl, in the film.
Janani Iyer took her time to lambast some mischievous reports which said that she is looking for green ‘pastures’ in other film industry. While refuting those reports, she reiterated that she would not run away from Tamil Cinema and she would establish her position here.