நான் முன்னே தி.மு.க… இப்போ அ.தி.மு.க. – நடிகர் பார்த்திபன் பரபரப்பு பேச்சு

‘ஞானக்கிறுக்கன்’ பாடல் வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்தார் கவிதை கிறுக்கன் பார்த்திபன். இந்த விழா நடந்த நேரம் பார்த்துதானா விகடன் இதழ் அப்படியொரு செய்தியை போட வேண்டும்? இந்திய சினிமாவின் நுற்றாண்டு விழாவுக்கு யார் யாரையெல்லாம் அழைக்கக் கூடாது என்று மேலிடம் ஒரு உத்தரவு போட்டதாம். அதில் விஜயகாந்த், கார்த்திக், ராதிகா, வடிவேல், இவர்களுடன் பார்த்திபனையும் அழைக்கக் கூடாது என்றார்களாம். இந்த செய்தியை அந்த மேடையில் பகிர்ந்து கொண்டார் பார்த்திபன். அதற்கப்புறம் அவர் பேசியதை அரசியல் நையாண்டி என்று எடுத்துக் கொண்டாலும் ஓ.கே. அமைதியான எதிர் தாக்குதல் என்று எடுத்துக் கொண்டாலும் ஓ.கே.

ஆனந்த விகடன்ல எழுதப்பட்டிருக்கிற மற்றவங்களுக்காகவாவது அரசியல் ஆதாயம் இருக்கு. எனக்கு எதுவுமே இல்லை. என்னை எல்லாரும் திமுக ன்னு நினைச்சுகிட்டு இருக்காங்க. ஆனால் நான் திமுக தான். திரைப்பட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்தவன். என்னுடைய முதல் படத்துக்கே தேசிய விருது வாங்கியதால் இப்போ அ.தி.மு.க. அதாவது அனைந்திந்திய திரைப்பட முன்னேற்றக் கழகம்.

இந்திய சினிமாவின் நுற்றாண்டு விழாவில் சாதனையாளர்கள் எல்லாரையும் அழைச்சு மேடையில் கவுரவிச்சுருக்கணும். இதை நான் ஒரு சினிமா கலைஞனா சொல்லிக்கிறேன். அந்த விழாவில் அழைக்கபடவில்லை என்றாலும், இந்த மேடையில் நான் இயக்குனர் இமயம் பாரதிராஜாவுக்கு நினைவு பரிசு வழங்குகிறேன் என்றார். இதை யாரும் தயவு செய்து அரசியலா எடுத்துக்க வேண்டாம் என்று அவர் வலியுறுத்தி சொன்னதால் அதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் ரசிகர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

பின்னாலேயே பேச வந்த பாரதிராஜா, ஹீரோக்கள் சினிமாவில் மட்டும்தான் வீரர்களா இருக்காங்க. சில விஷயங்களில் அவங்களுக்கு முதுகெலும்பு இல்லே. இது வேண்டாம்னு புறக்கணிக்கிற துணிச்சல் அவங்களுக்கு இல்லை என்றார் வெளிப்படையாக. அந்த விழாவில் பலருக்கும் அழைப்பிதழ் கிடைக்காமல் போன விஷயத்தை குறிப்பிட்டு வேதனைப்பட்ட பாரதிராஜா, தமிழ்நாடு திரைப்பட வர்த்தக சபைன்னு ஒரு அமைப்பை நாம் உருவாக்கியிருந்தா இப்படியெல்லாம் நடக்குமா என்றார்.

கூடினோம்… பேசினோம்… மறுபடியும் ஏதாவது மேடை கிடைத்தால் பேசுவோம். அதற்கப்புறம் சும்மாவே இருப்போம் மறுபடியும் ஒரு மேடை கிடைக்கிற வரைக்கும். நாங்க தமிழன்டா… என்றொரு ‘நிறைந்த குடிமகன்’ நிகழ்ச்சி நடந்த கமலா திரையரங்க வாசலில் நின்று கூவிக் கொண்டிருந்தது, பாவம்… பாரதிராஜா, பார்த்திபன் காதுகளில் விழுந்திருக்க வாய்ப்பேயில்லை.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அந்த வேலையெல்லாம் வச்சுக்கக் கூடாது… -ஹன்சிகாவை எச்சரித்த குஷ்பு

காதல் தோளில் ஏறிக் கொள்ளாத வரைக்கும்தான் எல்லோருக்கும் நிம்மதி. ஏறிடுச்சுன்னா? ஹன்சிகாவிடம் கேட்டுப் பாருங்கள் சொல்லுவார். இதுவரைக்கும் தனது பட ஷுட்டிங்குகளுக்கு நிம்மதியாக வந்து போய் கொண்டிருந்த...

Close