நான் ரம்யா நம்பீசனோட ரசிகன்! விசில் கூட அடிச்சிருக்கேன்… -வெங்கட்பிரபு கலாட்டா

டமால் டுமீல்…! விரைவில் வெளிவரப்போகும் தமிழ்ப்படம் இது. அடிதடி வெட்டுக்குத்து படமாக இருக்குமோ என்கிற சந்தேகத்தோடு இந்த தலைப்பை பார்க்கிறவர்களுக்கு ஆறுதலாக அமைந்தது ட்ரெய்லரும் பாடல்களும். இது பிளாக் காமெடி டைப் படம். அதுமட்டுமல்ல, கொஞ்சம் த்ரில்லர், க்ரைம்மையும் சேர்த்திருக்கிறார் படத்தின் இயக்குனர் ஸ்ரீ. ஷங்கரின் எந்திரனில் பணியாற்றியவர். இவரும் ராஜாராணி அட்லீயும் ஒன்றாக பணியாற்றினார்களாம் ஷங்கரிடம். இன்று சத்யம் வளாகத்தில் நடந்த பாடல் வெளியீட்டு விழாவுக்கு, படத்தின் ஹீரோ வைபவ், ஹீரோயின் ரம்யா நம்பீசனுடன், ஒரு முக்கிய பாடலை பாடியிருக்கும் உஷா உதுப்பும் கலந்து கொண்டார்.

வைபவ் இருந்தால், அவரது கோஷ்டிகளான வெங்கட்பிரபு, பிரேம்ஜி இருவரும் இருந்தாக வேண்டுமே? இருந்தார்கள்! பிரேம்ஜி மைக்கை பிடிக்க வந்ததுமே அரங்கம் ஆரவாரித்தது. வைபவ் பெரிய ஹீரோவாகணும். அவரோட படத்துக்கெல்லாம் நான்தான் மியூசிக் போடணும். ஏன்னா தமிழ்ல நான் ஹீரோவா நடிச்ச படத்துல வைபவ் எனக்கு பிரண்டா நடிச்சிருக்காரு. அந்த பழக்கத்துல கேட்கிறேன் என்று ரகளையடித்துவிட்டு போனார் பிரேம்ஜி. தம்பி எவ்வழியோ? அண்ணனும் அவ்வழி. வெங்கட் பிரபு மைக்கை பிடிக்கும் போதும் அதே கொண்டாட்டம் ரசிகர்களிடத்திலிருந்து. குள்ளநரி கூட்டம் பார்த்த நாளிலிருந்தே நானும் பிரேம்ஜியும் ரம்யா நம்பீசனோட ரசிகர்களாகிட்டோம். இப்ப கூட அவரை ஸ்கிரீன்ல பார்த்ததும் நாங்க ரெண்டு பேரும் விசிலடிச்சோம் என்றார்.

இந்த படத்தில் நான் ஒரு பாடல் பாடியிருக்கேன். ஃபை ஃபை பாட்டு கூட லட்சுமிமேனனுக்காகதான் பாடினேன். ஆனால் இந்த படத்தில் நான் பாடிய பாடல் எனக்காகவே பாடியது. அதனால் ரொம்ப சந்தோஷமா இருக்கு என்றார் ரம்யா நம்பீசன். முன்னதாக டமாலு…டூமீலு… என்ற பாடலுக்கு உஷா உதுப்பும், ரம்யா நம்பீசனும் மேடையிலேயே ஒரு குத்து போட்டார்கள். சற்றே அசுவாரஸ்யத்துடன் போய் கொண்டிருந்த நிகழ்ச்சியை தனக்கேயுரிய உற்சாகத்துடன் கலகலப்பாக்கிய உஷா உதுப், எவர் கிரீன் யூத்தாகவே தெரிந்தார் பலரது கண்களுக்கு.

நான் நாற்பது வருஷத்துக்கு முன்னாடி இதே சென்னையில்தான் என்னோட கேரியரை ஆரம்பிச்சேன். ஐ லவ் சென்னை என்று கூறிய உஷா உதுப், நீங்கள்ளாம் கேட்டுகிட்டீங்கன்னா நான் பாடுவேன் என்று சொல்ல, அதற்கப்புறம் மொத்த கூட்டமும் கைதட்டி அவரை பாட வைத்தது. தெலுங்கில் டாப் மியூசிக் டைரக்டர்களில் ஒருவராக இருக்கும் தமன், இந்த படத்தில் போட்டிருக்கும் அத்தனை பாடல்களும் ட்ரென்ட் செட்டர் என்றார்கள் விழாவில் பேசிய அத்தனை பேரும்.

மார்ச்சில் ரிலீசாம். பிளாக் காமெடி ரசிகர்கள் காத்திருக்கலாம்…

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
பணம் இருக்கிறவன்தான் ஒய் திஸ் கொலை வெறி பண்ணணுமா..? நாங்க பண்ணக்கூடாதா?

எல்லாருக்கும் எண்ட் கார்டு போட்டப்புறம் போடுற மியூசிக் சார், நம்ம லைப்புக்கு பிகினிங், டைட்டில் கார்டு போடுமான்னு ஒரு நப்பாசை. ஆசை ஆசையா வேலைய செஞ்சிகிட்டு இருக்கோம்...

Close