நாய் செத்துப்போச்சு…. த்ரிஷா கண்ணீர்!

‘என் தங்கச்சிய நாய் கடிச்சிருச்சுபா….’ என்று ஜனகராஜ் இப்போது அழுதால் பொசுக்கென அவர் வாயை பொத்துவது த்ரிஷாவின் கரமாகதான் இருக்கும். ஐந்தறிவுகளிடம் அவர் காட்டும் அன்பை ஆறறிவுகளிடம் காட்டியிருந்தால், த்ரிஷா வீட்டை சுற்றி காதல் பரத்துகளாகதான் நடமாடியிருப்பார்கள். அந்தளவுக்கு பிராணிகளின் பிதாமகள்தான் நம்ம த்ரிஷா.

அவ்வளவு அன்பான த்ரிஷாவை விட்டுவிட்டு அவரது நாய் விண்ணுலகம் ஏகிவிட்டது. இன்று இது குறித்து ட்விட் பண்ணியிருக்கும் த்ரிஷா, உன்னை இழந்துட்டு நான் எப்படி வாழ்வேன் என்று கவலை தெரிவித்திருக்கிறார். அதோடு விட்டாரா? உன்னோடு சேர்த்து என் ஒரு பார்ட்டையும் புதைத்துவிட்டேன் என்று கவலைப்பட்டிருக்கிறார். த்ரிஷா கண்ணீர் விட்டால் சினிமாவுலகம் சும்மாயிருக்குமா? சீக்கிரம் இந்த கவலையிலிருந்து விடுபட எல்லாம் வல்ல இறைவன் துணை புரியட்டும் என்று த்ரிஷாவை தேற்றியிருக்கிறார் சமந்தா.

சாலையில் குறுக்கே வரும் நாய்களை ‘அறிவுகெட்ட நாயே‘ என்று ஆவேசத்துடன் திட்டுவதற்கு முன் ஒரு ஒரு முறை யோசித்துக் கொள்ளுங்கள். அது த்ரிஷாவின் மனம் கவர்ந்த நாயாக இருந்தாலும் ஆச்சர்யமில்லை.

Trisha in sorrow as she lost her pet!

Everyone knows how Trisha is a pet enthusiastic and would walk the extra mile in protecting the animals. Recently she lost her pet dog which she was keeping at her home. She expressed her sorrow about the loss of her pet dog in one of her tweets. She said in her tweet that she felt having lost a part of her body. Samantha responded to her tweet saying let God help her in coming out of her sorrow. Though it may appear funny, we appreciate the genuine feelings of Trisha.  

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
கல்யாண சமையல் சாதம் விமர்சனம்

மடிசாரையும் ‘குடி‘சாரையும் மிக்ஸ் பண்ணி அடித்திருக்கிறார்கள். இது ‘அவாள்’ வீட்டு பந்தி வேறு. ஆரம்பத்தில் பரிமாறப்படும் எல்லாமே ஒரு வித அசுவாரஸ்யத்தை ஏற்படுத்துகிறது. அதற்கப்புறம் இந்த கதை...

Close